பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

அப்பாத்துரையம் - 36

ம்

வெளியில் போகக்கூட முடியாமல் அவன் தன் அறையிலேயே அடைபட்டுக்கிடந்தான். அறையின் குடிக்கூலி கொடுபடாததால் நெடுநாள் அங்கும் இருக்க வழி இல்லை. எங்காவது நாட்டுப்புறம் சென்று சாக வகைதேடுவது என்று அவன் குதிரை மீதேறிப் புறப்பட்டான்.

வெளியேறல்

எண்ணெயின் பசைகூட இல்லாமல் தூசி அடைந்து காடாய்க்கிடந்த அவன் தலையையும், உடைந்தும் துருப்பிடித்தும் சிதைந்தும்போன அவன் இருப்புக் கவசத்தையும், கங்காளம் போல் தோன்றிய அவன் குதிரையையும் கண்டு அந்நகர்ச் சிறுவர் சிறுமியர் பலர் ஏளனம் செய்து கைகொட்டி நகைத்தனர். ஆனால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. தீயவள் ஒருத்திக்காகத் தன்னை துன்புற விடும் இறைவன் செயலின் திறத்தைப் பற்றி மட்டும் எண்ணிக்கொண்டு அவன் வருத்தத்துடன் காட்டை நோக்கிப் போனான். காட்டில் அவன் உணவின்றி நெடுந் நெடுந் தொலை தொலை அலைந்து திரிந்து ஒரு கான்யாற்றின் கரையில் வந்ததும் குதிரையை விட்டிறங்கி அதனை இளைப்பாறச் செய்து தானும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டான்.

வ்

அவ் ஆறு சற்றுத் தொலைவில் ஓர் அருவியாக விழுந்து வந்து கொண்டிருந்தது. அவ் வருவியின் பக்கமாக அவன் கண்கள் சென்றன. "இவ் வருவியின் சாயலும் இன்னோசையும் உடைய பெண்மை உலகில், கினிவீயர் போன்ற தீயவளும் பிறந்தனளே!” என்று நினைத்தது அவன் உள்ளம். அச்சமயம் அவன் முன் அரம்பையரும், நாணும் அழகும் பொலிவும் உடைய இருமாதர் நின்று, குழலினும் இனிய குரலில் “எல்லோரும் அத்தகைய வரல்லர் பெருந்தகையோய்?” என்று கூறினர்.

இரு பேரழகியர்

66

வ் ஆளற்ற காட்டின் தனியழகிற்கும் அழகே போலத் திகழும் நீவிர் யாவீர்?" என்று அவன் வியப்புடன் வினவினான். அவர்களுள் ஒருத்தி, "ஐய! எம் தலைவி தம்மைத் தன்னிடம்