பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

37

வரும்படி அழைக்கிறாள்," என்றாள். உடனே அவன் “ஒப்பற்ற அரமகளிரே! உம் இருவருக்கும் வணக்கம். உம்மையும் உம் தலைவியையும் எங்கு வேண்டுமாயினும் பின் தொடருகிறேன்,” என்றான்.

அவன், தன் தோழியையே தலைவி எனக் கொண்டான் என்று கண்டு அவள், "இவள் என் தோழி; எங்கள் தலைவி சற்றுத் தொலைவில் கொலு விருக்கின்றாள். நாங்கள் பணிப்பெண்கள் மட்டுமே," என்றாள். “பணிப்பெண்களே இவ்வளவு அழகானால் இவர்களை ஆட்கொள்ளும் மங்கையர்க்கரசி எவ்வளவு அழகாக இருக்க மாட்டாள்," என வியந்து கொண்டே சென்றான் லான்வால்.

அழகுத் தெய்வம்

அவன் வியப்பையும் வியக்கச் செய்யும் முறையில் அக்காட்டின் நடுவில் திங்களங்கல்லால் அமைத்த மணி மண்டபத்தில் பொற்றூண்கள் வாய்ந்த பட்டு மேற் கட்டியின் கீழ் நீல ஆடை உடுத்து வீற்றிருந்தது.

66

மீன்படை சூழ்ந்த நிறைநாட் பிறைபோன்றதோ அழகுத் தெய்வம்! லான்வால் அவள் காலில் விழப்போகுமுன் அவள் அவனைச் சேர்த்தெடுத்து ஒப்பான இருக்கை தந்தமர்த்தினாள். பின் அவள் அவனைக் கண்குளிரப் பார்த்து நகைத்து, வள்ளன்மை மிக்க வீரனே நீ என் மனத்தைக் கொள்ளை கொண்டாய்.நான் உன்னை காதலிக்கின்றேன். ஆனால் உன்னை என்னுடன் அழைத்துச் செல்லுமுன் நீ மீண்டும் உலகில் சென்று என் பணி செய்ய வேண்டும். ஆனால் நீ நினைத்த நினைத்த நேரமெல்லாம் நான் கட்டாயம் உன்னிடம் வருவேன்,” என்றாள். அவன் அதனை விருப்புடன் ஏற்றான் என்று சொல்ல வேண்டியதில்லை.

லான்வாலின் நற்பேறு

மேலும் அவள் அவனிடம், “உன் கொடைகளை இனிப் பொருட்குறையால் நிறுத்த வேண்டியதில்லை இதோ இப்பையில் நீ எவ்வளவு எடுத்தாலும் குறையாது பொன்வரும். உனக்கு எல்லாச் செல்வமும் நிறைக!” என்று கூறியனுப்பினாள்.