பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அப்பாத்துரையம் - 36

அவள் அன்பிற்கு அறிகுறியாயிருந்த அவன் ஒண்கவசமும் ஒளி இழந்தது. வீரர் நிறைந்த அவையில் அரசன் வீற்றிருந்து அவன் குற்றத்தை ஆராய்ந்தான். வீரர் ஒருமிக்க அவன் தன் தலைவியைக் கொணர்ந்து தான் கூறியபடி அரசியினும் அழகுடையவள் என்று நிலை நாட்டினால் பிழைக்கலா மென்றும், இன்றேல் தலையிழக்க வேண்டு மென்றும் தீர்ப்புச் செய்தனர்.

அழகுத் தெய்வம் தோன்றல்

லான்வால் தலையிழப்பதே இனி நன்றென நின்றான். தூக்கு மேடையருகே எண்ணற்ற மக்கள் திரளின் நடுவே அக்கொடிய அரசியும், அவளை நம்பிய அப்பாவி அரசனும் வீற்றிருக்கும் இருக்கை முன்னாக அவன் சாவுக்குக் காத்து நின்றான். தூக்கிடும் மணி அடிக்கலாயிற்று. அச்சமயம் வெண் குதிரையேறி வெண்ணிலவுடுத்த விரிகதிர்ச் செல்விபோல் ஒரு விண் மாது விரைந்து வந்து அப்பேரரைவயுட் புகுந்தாள். லான்வால் அவளைக் கண்டதே தன்னை மறந்து, “ஆ! என் தலைவி! என் அரசி! உன்னை மீண்டும் காணப்பெற்றேன்! பெற்றேன்!" என்றரற்றி அவளை அணுகப் போனான். அவள் அவனை அசட்டை செய்ததுபோல் விலக்கி, நேரே அரசி பக்கம் சென்று நின்று நிறை அவையை நோக்கி, “அவையீர்! இதே இவ்வீரன் குற்றமற்றவன், அவன் மொழியின் வாய்மையை நிலைநாட்ட நான் இதோ நிற்கிறேன். உமது முடிவை இனிக் கூறுக,” என்றாள்.

""

அவையோர் ஒரே குரலில், “லான்வால் கூறியது உண்மை. அவன் குற்றமற்றவன்,' என்றனர் அரசனது அரசனது காவலர் லான்வாலை விடுவித்தனர். விண்மாது மின்னெனக் குதிரை மீதேறிப் பாய்ந்து சென்றாள்.

நிலைபெற்ற பேரின்பம்

லான்வால் “ஆ! வாழ்வு நீத்த என்னைச் சாவினின்றும் விலக்கி விட்டு ஏன் போகின்றாய்? என்னை யாரிடம் இங்கே எதற்காக விட்டுச் செல்கிறாய்? என் உயிரே!" என்று அவளைப் பின்பற்றிச் சென்றான். அச்சமயம் அவன் அங்கி மீண்டும்