பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

41

ஒளிபெற்றுத் திகழ்ந்தது. வெளியில் அவன் குதிரை அவனுக்காகக் காத்து நின்றது. அதிலேறிக் காற்றிலும் கடிது செல்லும் தன் தலைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அவன் முதலில் காட்டில் கண்ட ஆற்றினுள் அவள் குதிரையுடன் பாய்ந்தாள். அவனும் உடன் பாய்ந்தான். வெள்ளம் யானையை மடக்கும் வன்மையுடன் சுழன்றது சென்றது. அப்படியும் விடாது லான்வால் அவளைப் பின் தொடர்ந்தான். இறுதியில் விண்மாது அவளுடைய குதிரையுடன் நீரினுள் மூழ்கினாள். சற்றும் முன்பின் பாராமல் லான்வால் உடனே தன் குதிரையை மிதக்கவிட்டு விட்டுத் தான் மட்டும் நீரினுள் அவள் மூழ்கிய இடத்தைப் பின்பற்றி மூழ்கினான். ஆற்று வன்மையில் அவன் நிலை தளர்ந்தது. இனித் தாழா நிலையில், “ஆ! என் தேவி!” என்று எதையோ எட்டிப் பிடித்தான். அஃது அவன் தேவியின் ஆடை நுனியேயன்றி வேறன்று. தேவியின் மலர்க்கைகள் அக்கணமே அவனை அணைத்தன. பின் அவன் உணர்வு இழந்தான்.

எழுந்து

நோக்கும்போது

அவன் விண்ணோர் நாடென்னும்படி வியத்தகு பொற்புடைய இடத்தில் தன் உள்ளங்கவர்ந்த அவ் விண்மாதுடன் இருப்பதாக உணர்ந்தான். அவள், காதொடு காதாக அவனிடம், “வீரவள்ளலே! னி ஓய்விலாப் பேரின்ப வாழ்வில் இரண்டறக் கலந்து உறைவீர்,!” என்றாள்.