பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அப்பாத்துரையம் - 36

தனக்குப் பிறந்த குழந்தை மட்டும் பெண்ணாயிராமல், ஆணாயிருந்திருந்தால் தனக்கு இத்தலைகுனிவு ஏற்பட்டிராதே, என்று அவன் நினைக்க நினைக்க வாழ்க்கையில் வெறுப்புப் பின்னும் மிகுந்தது. மிகவே அவன் நகரை விட்டுக் காட்டகஞ் சென்று வாழ்ந்தான்.

ஸோராப் தந்தையைக் காணச் செல்லல்

தார்த்தாரி நாட்டில் தஃமீனா தன்குழந்தையை ஸோராப் என்ற பெயரிட்டுத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாள். அவன் "எங்கே போருக்குப் போய் விடுவானோ என்ற அச்சத்தால் அவனை அவள் கூடிய மட்டும் வீட்டில் வைத்துப் பெண் போலவே வளர்த்தாள். ஆயினும், "புலிக்குப் பிறந்தது பூனைக்குட்டியாகாதன்றோ?" ஸோராப் எளிதில் தன் தந்தை இன்னான் என்பதை அறிந்து அடிக்கடி, தன் தந்தையிடம் தன்னை அனுப்புமாறு தாயைத் தொந்தரவு செய்தான். அவனுக்குப் பதினாறாண்டானபோது அவளால் மேலும் அவனைத் தடுத்து வைக்கக் கூடாமல், தந்தையைப் பார்க்கும்படி அவனை அனுப்பினாள். தந்தைக்குத் தன்னை இன்னான் என்று அறிமுகப்படுத்த, அவன் கழுத்தில் சிறுமையில் பொறித்த ரஸ்டத்தின் கணையாழிப் பொறியைப் பொறித்து, அதைக் காட்டும்படி அவள் அவனுக்குக் கூறினாள்.

ஆனால், இச்சமயம் பார்த்துத் தார்த்தாரிய அரசனுக்கும் பாரசீக அரசனுக்கும் சண்டை மூண்டது. பாரசீக அரசன் இப்போது ரஸ்டத்தைப் புறக்கணித்து விட்டதால், அவன் இப்போது பாரசீகப் படையை நடத்த வரமாட்டான் என்ற துணிவிலேயே தார்த்தாரியர் படையெடுத்தனர். தந்தையைக் காணப்போவது இச்சமயம் அரிதெனக் கண்டதும், எப்படி யாவது தானும் போரில் கலந்து கொண்டால்ரஸ்டத்தை நேரில் காண முடியும் என்றும், ஒருவேளை ரஸ்டம் அங்கு வராவிடினும் கூடத் தன் புகழேனும் அவன் காதிற்கேட்டு அவன் தன்னை அழைக்கக் கூடுமென்றும் ஸோராப் நினைத்தான். நினைத்துத் தார்த்தாரிய அரசன் அஃவ்ராஸியப்பின் (Afrasiab) படையிற் சேர்ந்து சண்டை செய்தான்'.