பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5

ஸோராபின் வீரம்

45

போரில் ஸோராப் இளஞ்சிங்கம்போல் நின்று பாரசீகரை மீண்டும் முறியடித்துத் துரத்தினான். தார்த்தாரியப் படைத்தலைவனான பெரன்விஸா இதனால் அவனிடம் அளவற்ற பற்றுதலும் நன்மதிப்பும் கொண்டிருந்தான். ஆயினும், ஸோராபின் மனத்தில் மட்டும் தன் புகழ் கேட்டு மகிழ்ச்சியே தோன்றவில்லை. தன் தந்தையை வீரர் தலைவனாகிய ரஸ்டத்தைக் கண்டு அவன் முழங்கால்களைக் கட்டியணைக்கும் பேறுகிட்ட வில்லையே என்ற ஒரே கவலை அவனை வாட்டியது எப்படியாவது அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.

ஸோராபின் திட்டம்

>>

அதன்படி தலைவனாகிய பெரன்விஸாவிடம் சென்று தனக்கு ஒரு குறை உண்டென்றும், அதனைத் தவிர்க்க வேண்டு மென்றும் கேட்டான். வீரத்தில் சிறந்தவனாயிருந்தும் அழகும் மென்மையும் மாறா இளைஞனான ஸோராபைத் தன் மகனெனப் பரிந்து அன்பு கொண்டவன் பெரன்விஸா.ஆதலின், அவன், "நீ கேட்க நான் கொடுக்காத பொருளுமுண்டோ? கூறுக,”என்றான். உடன் தானே ஸோராப், “பாரசீகப் படையும் நம் படையும் சண்டையிடுவதால், எத்தனையோ பேர் இறக்கலாம்; அதனை விட்டு நான் நம்பக்கம் நின்று, பாரசீகருட்சிறந்த வீரனொருவனுடன் சண்டையிட்டே வெற்றி தோல்வியை நிலைநிறுத்தலாமே! அதற்காக எதிரிபக்கம் அழைப்பு விடுக்க வேண்டுகிறேன்" என்றான்.

பெரன்விஸா ஸோராபை இத்தகைய துணிகரச் செயலிலிருந்து விலக்க மிகவும் முயன்றும், அவன் பிடிவாதமா யிருந்ததால், அவன் வேண்டுகோளுக்கிணங்கி அங்ஙனமே அழைப்பு விடுத்தான்.

பாரசீக அரசன் அவ்வைைழப்பைத் தன் வீரருக்குக் காட்டினான். ஸோராபின் கைத்திறனை அறிந்தும், அவன் துணிவைக் கண்டு அஞ்சியும் அவர்கள் செயலிழந்து நின்றனர்.