பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பாரசீக மன்னனின் கவலை

அப்பாத்துரையம் - 36

பாரசீக அரசனுக்கு இப்போதுதான் ரஸ்டம் இல்லாக் குறை தெரிந்தது. "பாரசீக நாட்டின் தூணான வீரர் வணங்கும் தெய்வமாகிய -பேர் கேட்டாலே பகைவரை நடுங்கவைக்கும் போர்யாளியாகிய ரஸ்டமிருந்தால், இப்படி நேற்றுப் பிறந்த மீசையற்ற சிறுவன் கைபட்டுத் தானும் தன்படைக டகளும் அல்லோல கல்லோலப்பட வேண்டிய தில்லையே,” என்று நினைத்துக் கண்ணீர் விட்டான். தன்னைச் சுற்றி புது நாகரிகப் புகை வளர்த்த கோழைகளை ஏறெடுத்தும் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் அமைச்சர்களைப் பார்த்து, "நம் பிழைகளையெல்லாம் ஏற்று ரஸ்டத்திடம் சென்று று அழுதோ, வணங்கியோ, அவன்முன் நின்று முரண்டியோ, எப்பாடுபட்டாயினும் அவனை அழைத்து வந்தாலன்றி, எமக்கு உய்வகையில்லை," என்றான்.

ரஸ்டம் பேரணிக்கு வருதல்

அதன்படியே அமைச்சர் சென்று மன்றாடி ரஸ்டத்தை ஒருவாறு இணங்கச் செய்து அழைத்து வந்தனர். ஆனால், ரஸ்டத்துக்குப் போர் விவரம் ஒன்றும் தெரியாத புதிய வீரனாகிய ஸோராபுடன் சண்டை செய்ய மனமில்லை. தான் ரஸ்டம் என்று கண்டவுடன் அவன் ஓடி விடக்கூடும்; அல்லது பணிந்து தன்னுடன் நட்புக்கொண்டு விட்டதாகக் கூறித் தன் புகழில் பங்கு கொண்டுவிடக் க் கூடும் என்று அவன் ஐயப்பட்டான். ஆகவே, தான் வந்து போரிடுவதாயின் மாற்றுருக் கொண்டே போரிடுவதாக அவன் கூறினான். அரசன் அதற்கிணங்கவே, ரஸ்டம் ஏதோ ஒரு வீரனென்ற முறையில் உடையணிந்து, தன் குதிரையையும் உருத்தெரியாமல் மாற்றிக் கொண்டு ஸோராபின் முன் வந்தான்.

ஸோராபின் மயக்கம்

பாரசீகப் படையில் ஒப்பற்ற வீரன், தன் தந்தையாகிய ரஸ்டமேயாதலால், அவனை எளிதில் காணலாம் என்ற எண்ணங்கொண்ட ஸோராப் இவ்வழைப்பை விடுத்திருந்தான். அதற்கு நேர்மாறாக ஏதிலனாகிய வீரன் ஒருவன் வருவது கண்டு