பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

47

வியப்படைந்தான் அவன் ஆண்மையையும் பெருந் தன்மை யையும் கண்டு ஒரு வேளை அவன்தான் ரஸ்டமோ என்றும் எண்ணமிட்டு மயங்கினான்.

போர் தொடங்கு முன்னாகவே ஸோராப் ரஸ்டத்திடம், “நீ ரஸ்டம்தானா?" என்று கேட்டான். உண்மையின்னதென்று உய்த்தறிய இயலாத ரஸ்டம், "இவன் நம்மை இன்னான் என்றறியாது நான் முன் நினைத்தபடி என்னுடன் பசப்பிச் சொல்லவே வந்தான்,” என்று நினைத்து "சிறுவனே! நான் யாராயிருந்தால் என்ன? நீ கேட்டதைப் பார்த்தால் நீ என்னவோ ரஸ்டத்தை ஒரு கிள்ளுக்கீரை என்று மதித்திருக்கிறாய் என்றல்லவோபடுகிறது! ரஸ்டமாவது உன் போன்ற புதுப் புரட்டன் முன் போரிட வருவதாவது? ஏன் வீணில் பசப்புகிறாய்! உனக்குப் போரிட அச்சமாயின், உண்மையைக் கூறிவிடு; வீணில் வீம்பு அடித்துக் கொண்டு உயிரிழக்க வேண்டாம்,” என்றான்.

தந்தையும் மகனும் போரிடல்

ரஸ்டம் என்று ஐயுற்றும், அதனை உறுதிப்படுத்த முடியாமல் தயக்கமுறும் ஸோராபின் காதுகளில், அவனைச் சிறுவனென்றும், கோழை யென்றும் கூறி இச் சொற்கள் புகுந்து மறைந்து கிடந்த அவன் ஆண்மையையும், வீரத்தையும் தட்டியெழுப்பின. எழுப்பவே அவன் சீறியெழுந்து வலசாரி இடசாரியாகச் சுற்றி ரஸ்டத்தை வளைத்துப் போர்புரியத் தொடங்கினான்.

ரஸ்டம் ஆண்டில் முதிர்வுடையவனாய் விடினும், அவன் கைவன்மையும், உடல் வன்மையும் கெட்டுவிடவில்லை. ஆயினும் ஸோராப் இளைஞனாதலால், உடல் வலியுடன் விரையும் கொண்டு, நாற்புறமும் சுற்றி எதிர்ப்பது அவனுக்கு முதலில் ஒத்த போராகப்படவில்லை. அவனை அப்படி ஆடவிடாமல் அடக்க வேண்டுமென்று மனத்துட்கொண்டு தன் வேலால் அவனைத் தாக்கி எறிய முயன்றான். அவ்வேலின் வன்மையையும் கொடுமையையும் ஒரு நொடியில் உய்த்தறிந்த ஸோராப் முயல் குட்டி போல் துள்ளி அதற்குத் தப்பினான். தப்பவே பின்னும் பன்மடங்கு சீற்றத்துடன் ரஸ்டம் அவ்வேலினை விட்டு எறிந்தான்.ஸோராப் அப்பொழுதும் விரைந்து விலகவே வேல்