பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

||-

அப்பாத்துரையம் - 36

அவரைப் பற்றிக் கூறுகையில், “அவர் பேராழியினின்றெழுந்தவர்; பேராழியிற் சென்றொடுங்குபவர். அவர் பிறப்பு இறப்பற்றவர்,” என்று மிகவும் மறை பொருளாகக் கூறி வந்தார்.

து:

ஆர்தர் பிறப்புப் பற்றி மெர்லின் மூலமாக வந்த வரலாறு

“ஒரு நாள் அதர், மெர்லினுடன் கடற்கரையடுத்திருந்த ஒரு குன்றின் அடிவாரத்தில் போய்க் கொண்டிருந்தார். அதர் மனத்தில் அப்போது பிரிட்டன் நாட்டின் குழப்பம் தீரும்படி தமக்கு ஒரு நற்புதல்வனில்லையே என்ற கவலை நிறைந்திருந்தது.அச்சமயம் வானளாவ எழுந்த ஓர் அலை மீது ஒரு கப்பல் தெரிந்தது. அதில் உள்ள மனிதர் அனைவரும் (பிற்காலத்திய ஆர்தருருவைப் போலவே) நெடிய வெண்பொன் உருவமுடையவராகவும், வெள்ளிய ஆடை உடுத்தியவராகவும் இருந்தனர். அதர் கண்களுக்கு அவர்கள் மனிதராகவே தோன்றவில்லை. தேவர்களாகத் தான் காணப்பட்டனர். அவர்களைக் கண்டு அரசன் மிகவும் வியப்படைந்தான். ஆனால், மெர்லின் அவர்களை எதிர்பார்த்தே அரசனுடன் அங்கே வந்ததாகத் தெரிந்தது."

கப்பல் சற்று நேரத்தில் கண்ணுக்கு மறைந்து விட்டது. மெர்லின் அதரைக் கூட்டிக் கொண்டு குன்றிலிருந்து கடற்கரையில் இறங்கி வந்தான். அப்போது அவர்களை நோக்கித் தெளிவாக ஒன்பது அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வீசின. அவற்றுள் கடைசி அலை ஓரழகிய ஆண் குழந்தையைக் கரைமீது கொண்டு வந்து ஒதுக்கிற்று. மெர்லின் அக்குழந்தையை எடுத்து அதர் கையில் தந்து, "இதோ! உம் கால்வழியில் பிரிட்டனை ஆளப்போகும் உரிமை பெற்றவன்,” என்று கொடுத்தான்.

அதர் மீதுள்ள வெறுப்பைப் பெருமக்கள் இச்சிறுபிள்ளை மீதும் காட்டி விடப்படாதென அஞ்சிய மெர்லின், அதனை ஆண்டன் பெருந்தகை" என்ற ஒரு வீரனிடம் விட்டு வளர்க்கச் செய்தான். ஆர்தர் வளர்ச்சியடைந்து வருகையில் மெர்லினே அடிக்கடி வந்து அவருக்குக் கல்வியறிவும் படைக்கலப் பயிற்சியும் தந்தான். அந்நாளைய எல்லாவகை அறிவிலும் மேம்பட்டிருந்த மெர்லின் தன் மாயமும் மந்திரமும் நீங்கலாக எல்லாக் கலைகளிலும் ஆர்தரை ஒப்புயர்வற்ற வராக்கினான்.