பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

53

ஆர்தர் வீரத்திலும் அறிவிலும் சிறப்பு மிக்க சிறுவராயிருந்ததுடன் அன்பும், கனிவும் மிக்கவராகவுமிருந்தார். தாய் தந்தையர், அவர் தமக்கை பெல்ஸென்டைக் கொடுமைப் படுத்துவதுண்டு. ஆர்தர் அவளைப் பார்க்கப் போகும் போதெல்லாம் அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவார். அவள் மணமான பின்பும் ஆர்தரிடம், உடன் பிறப்பாளரிடமும் கூட பிறர் காட்டாத அளவு அன்பு உடையவளானாள்.

மெர்லின், ஆர்தருக்குக் கல்வி புகட்டியதேயன்றி அவர் வாழ்க்கையில் அவருக்கு வெற்றி தரப் பேருதவியாயிருந்த எக்ஸ்காலிபர்'7” என்ற வாளைப் பெறவும் உதவியாயிருந்தான். ஒருநாள் ஆர்தர் மெர்லினுடன் ஓர் ஏரிக்கரை யோரமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது முன் ஆர்தர் பிறப்பின்போது ஏற்பட்டது போன்ற அரிய காட்சி ஒன்று தோன்றியது. நீர் நடுவில் வெண்பட்டாடையுடுத்திய ஒரு வெண்மையான கை பேரொளி வீசும் வாள் ஒன்றை ஏந்தி, மேலெழுந்து அவ்வாளை மூன்று முறை சுழற்றியது.மெர்லினின் தூண்டுதலின் பேரில் ஆர்தர் ஒரு படகில் சென்று அதைக் கைக்கொண்டார். உடனே அக் கை வியக்கத்தக்க முறையில் நீருக்குள்ளேயே போயிற்று.

ஆர்தர் எடுத்த வாளின் பிடி பலவகை மணிக் கற்கள் பதித்த தாயிருந்தது. வாளின் ஓர் புறத்தில் “என்னைக் கைக் கொள்” என்றும், இன்னொரும் புறம் “என்னை எறிந்து விடு” என்றும் எழுதியிருந்தது. பிந்திய தொடர் கண்டு ஆர்தர் முகம் சுண்டிற்று. மெர்லின் அதுகண்டு, "வீசியெறியும் நாள் இன்றில்லை; அண்மையிலுமில்லை. அதற்கிடையில் அதனை வைத்துக் கொண்டு நீ எத்தனையோ வெற்றிகளை அடையப் போகிறாய்," என்றான்.

ஆர்தருக்குப் பின் அவர் ஆண்ட காமிலெட்18 அதாவது லண்டன் நகரில் நெடுநாள் அரசரில்லை. பெருமக்கள் சச்சரவினால் பெருங்குழப்ப மேற்பட்டிருந்தது. ஆர்தர் இப்போது இளைஞராய் விட்டபடியால் அவரை அரசராக்கி விட வேண்டுமென்று மெர்லின் முடிவு கொண்டான். ஆனால் ஆர்தர் அதரின் பிள்ளை என்று ஒருவருக்கும் தெரியாது. அதனை அவர்கள் எளிதில் ஏற்கும்படி அவன் ஓர் ஏற்பாடு