54
அப்பாத்துரையம் - 36
செய்தான். காமிலட் அரண்மனையின் ஒரு மூலையில் சலவைக்கல் ஒன்றில் ஒருவாள் பதித்து வைக்கப்பட்டிருந்தது. வாளின் பிடி மட்டும் வெளியிலும் மற்றப் பகுதி முழுவதும் கல்லினுள்ளாகவும் இருந்தது. அவ்வாள் பதித்திருந்த கல் மேல் என்னை வெளியே இழுப்பவன் இந்நகருக்கு மட்டுமின்றிப் பிரிட்டன் முழுமைக்குமே அரசனாவான் என்றெழுதியிருந்தது.
மெர்லின் பெருமக்களை அதன் முன் அழைத்து வந்து, "நாடு நெடுநாள் அரசனில்லாமல் சீரழிகின்றது. விரைவில் ஓர் அரசன் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். உண்மையான அரசன் யார் என்பது இப்போது தெரியாமலிக்கிறபடியால் இவ்வாள் மூலம் அதனை ஆராய்ந்து முடிவு செய்வோம்,” என்றான்.
19
மகனான
விருந்துக்கு வந்த பெருமக்கள் ஒரு போட்டிப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தனர். அதை விட்டு ஒவ்வொருவராக வந்து வாளையெடுக்க முயன்று ஏமாந்து போயினர். இதற்கிடையே இதே போட்டிப் பந்தயத்தில் ஈடுபட ஆர்தருடன் வந்து கொண்டிருந்த ஆன்டன் பெருந்தகையின் கேப்பெருந்தகை தன் வாளைக் கொண்டு வர மறந்துவிட்டான். அவன் ஆர்தரை அனுப்பி அதை எடுத்து வரச் சொன்னான். ஆர்தர் செல்லும் வழியில் அரண்மனை மூலையில் பதிந்து கிடந்த வாளைக் கண்டு இது போதுமே என்றெடுத்தான். அதுவும் எளிதில் வந்துவிட்டது. அதன் அருமை தெரியாத ஆர்தர், அதைக் கேயிடம் தரக் கே தந்தையிடம் சென்று தான் அதை எடுத்து விட்டதால் தானே அரசனாக வேண்டும் என்று கூறினான். பெருந்தன்மை மிக்க ஆண்டன் அவனை நம்பாமல் உறுக்கிக் கேட்க உண்மை வெளிப்பட்டது. அதன்பின் ஆண்டன் தன் மகனைக் கடிந்து கொண்டு வாளை மீட்டும் கல்லில் பதித்து அனைவரும் காண அதனை ஆர்தர் எடுக்கச் செய்தான். அதன்பின் மெர்லின் பெருமக்களையும் பொதுமக்களையும் அழைத்து ஆர்தரை அரசராக முடிசூட்டினான்.
ஆர்தர் அரசரானவுடன் பொதுமக்களிடையேயும் பெரு மக்களிடையேயும் உள்ள தம் நண்பர்களை அழைத்து, “குழப்பமடைந்த இந்த நாட்டில் நீங்கள் ஒழுங்கையும் தெய்வீக ஆட்சியையும் நிலை நாட்ட உழைப்பதாக ஆணையிட முன் வர வேண்டும். உண்மைக்குக் கடமைப்பட்டு நன்மையின் பக்கம்