சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5
ஏழை எளியோர்
55
நின்று ஆதரவற்றோர் பெண்டிர் ஆகியவர்கட்கு இன்னல் வராமல் காக்கவே நான் கொடுக்கும் வாளைப் பயன்படுத்திப் புகழ் பெறுவதாக உறுதி கூற வேண்டும். ஒரு தலைவியையே விரும்பி அவள் அன்பே புணையாகக் கொண்டு அருஞ்செயலாற்ற வேண்டும். இத்தகைய புகழ் வீரருக்கு நான் தூய வீரர் பெருந்தகை” என்ற பட்டம் தந்து என் வட்டமேடையில் இடந்தருவேன்” என்றார். அவர்களும் ஒத்து அவர் வட்ட மேடையைச் சுற்றியிருந்த நூறு இருக்கைகளை நிறைக்கலாயினர்.
அவர்கள் வீரத்தைச் செயலிற்காட்ட விரைவிலேயே ஒரு தறுவாய் ஏற்பட்டது. காமிலியார்டு21 நகரிலுள்ள லியொடக்ரான்22 என்ற அரசர் நாட்டில் ஸாக்ஸானியரும் தீய விலங்குகளும் வந்து பேரழிவு செய்தன. ஆர்தரையும், அவர் வீரரையும் அவர்கள் சூளுரைகளையு பற்றிக் கேள்விப்பட்ட அவர் தம் நாட்டிற்கு வந்து தமக்கு உதவுமாறு ஆர்தருக்கு அழைப்பனுப்பினார்.
ஆர்தரும் அவர் வீரர்களும் சென்று பல நாள் காட்டு விலங்குகளை வேட்டையாடி அழித்தும், ஸாக் ஸானியரை நாட்டுக்கு அப்பால் துரத்தியும் நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார்கள். அதோடு அவர்கள் வேரோடு படும்படி காடுகளும் அழிக்கப்பட்டு நாடாக்கப்பட்டன.
து
காமலியர்டில் அரசன் அரண்மனைக்குள் செல்லும் போதே ஆர்தர், மாடத்தல் நின்றிருந்த லியோடகிரான் புதல்வி கினிவீயரைக்23 கண்டு அவள் அழகில் ஈடுபட்டு அவளையே மணப்பதாக உறுதிசெய்து கொண்டார். இது கினிவீயருக்குத் தெரியாது.விலங்குகளையழித்துக் காடு திருத்தியபின் அவளைக் கண்டு, அவள் காதலைப் பெற அவர் எண்ணியிருந்தார்.ஆனால் காமிலட்டில் பெருமக்கள் வெளியிலுள்ள பகைவர்களை எல்லாம் திரட்டிப் படையெடுக்கச் செய்து தாமும் கிளர்ச்சி செய்ததாகச் செய்தி வந்தது. எனவே, வேண்டா வெறுப்பாக அவர் காமிலட்டுக்குச் சென்றார். தம் நலனைக் கருதாது நாட்டு நலனையே எண்ணி அவர் போருக்கு முனைந்தார்.
ஆர்தரை எதிர்த்தவர்களுள், பெரும்பான்மையோர் பிரிட்டனின் அரசர்களும், சிற்றரசர்களும் ஆக இருந்தனர்.