பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அப்பாத்துரையம் - 36

இச்சமயம் ரோமிலிருந்து வழக்கமான திறையைப் புதிய அரசனான ஆர்தரிடமிருந்தும் பெறுவதற்காகத் தூதன் வந்தான். “நாட்டைப் பாதுகாக்க முன் வராத பேரரசருக்குத் திறை ஏன்?” என்று ஆர்தர் கேட்டு விடையனுப்பினார். அதன் பின் ரோமர் படை ஒன்று வந்திறங்கிற்று. ஆர்தர் வீரர்கள் அவர்களை முறியடித்து ஓட்டினர்.

பேரரசரானார்.

பிரிட்டானியரிடையே தனித்தனி நின்று ஒற்றுமையைக் கெடுத்து உள்நாட்டுப் போர்களும் சச்சரவுகளும் விளைவித்து வந்த சிற்றரசர்களையும், குறுநில மன்னர்களையும் ஆர்தரின் வீரர் சென்றடக்கினார். அந்த பிரிட்டன் முழுமைக்கும் பிரிவுபட்டிருந்த பிரிட்டானியரைத் தனித்தனியாக ஆடுகள்போல் ஸாக்ஸன் கடற்கொள்ளைக் காரர்கள் கொத்தி வந்தனர். ஆர்தர் பிரிட்டன் படை களனைத்தையும் திரட்டித் தம் வீரருதவியுடன் அவர்களைக் கண்டவிடமெல்லாம் முறியடித்தார். மொத்தம் பன்னிரெண்டு போர்கள் நிகழ்ந்தன. பன்னிரண்டிலும் பிரிட்டானியருக்கே வெற்றி கிடைத்தது. கடைசிப் போர் பேடன் குன்றில்26 நிகழ்ந்தது. அத்துடன் ஸாக்ஸானியர் பிரிட்டன் இனி நமக்குற்ற இரையல்ல என்றெண்ணி வேறு நாடுகளில் தம் கவனத்தைச் செலுத்தினர்.

ஆர்தரின் வீரர்கள் செய்த அருஞ்செயல்கள் பல. அவற்றால் ஆர்தர் ஆட்சி புகழடைந்தது. அவற்றுட் சிலவற்றை அடுத்துவரும் பக்கங்களில் காணலாம்.

அடிக்குறிப்புகள்

1. Britain

2. Uther.

3. Rome.

4. Goths.

5. Britain.

6. Saxons.

1.

Scot.