பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5

61

வீரன் லயோனெலை விடப் பன்மடங்கு வலிமையுடை வனாயிருந்த படியால் லயோனெலையும் மற்ற வீரர்களைப் போலவே கட்டியுருட்டி இழுத்துக்கொண்டு சென்று தன் மாளிகையில் சிறையிட்டான். அங்கு முன்பே பல வீரர்கள் ஆர்தர் வட்டமேடை வீரர் பலர் உட்படச் சிறைப் பட்டிருந்தனர். அவர்களனைவரையும் காலை மாலை குதிரைச் சவுக்கால் குருதி கொப்பளிக்கும் மட்டும் அடிப்பதே அவனுடைய நாள்முறை விளையாட்டாயிருந்தது.

இவ்வீரன் வேறு யாருமல்லன்; லான்ஸிலட் பெருந்தகை தேடிக் கொண்டிருந்த கொடிய வீரன் துர்க்கையனே, அவன் லயோலெனலையும் பிறரையும் அடைத்த மாளிகையே ஆற்றுக்கடலை அடுத்த அவன் மாளிகை.

துர்க்கைனின் கொடுமைகளைக் கேட்டு அவனை எதிர்க்கும் எண்ணத்துடன் எக்டார் பெருந்தகை என்ற ஆர்தரின் இன்னொரு வீரனும் அப்பக்கம் வந்தான். துர்க்கைன் மாளிகையருகே ஒருமரத்தில் ஆர்தர் வீரர் பலரின் கேடயங்களைக் கண்டு அவன் சீற்றமும் மனவருத்தமும் கொண்டு மாளிகையை நோக்கிப் புறப்பட்டான். அப்போது வேட்டையாடி மீண்டு வந்து கொண்டிருந்த துர்க்கைன் அவனைப் பின்புறமிருந்து தாக்கினான். எக்டார் தன் திறமெல்லாங் கொண்டு அவனைத் தாக்கியும் பயனில்லாமல் போயிற்று. அவனைத் துர்க்கைன் கீழ்ப்படியும் படிக் கோரியும் தூய வீரனாகிய எக்டார் அதற்கு இணங்க வில்லை. ஆகவே துர்க்கைன் அவனையும் மற்றவர்களைப் போல் முள்ளிலும் கல்லிலும் கட்டி இழுத்துச் சிறையிலிட்டுத் துன்புறுத் தினான்.சிறையில் எக்டார், லயோனெலைக் கண்டு வியப்படைந்து "லான்ஸிலட் எங்கே?" என்று கேட்டான். லயோனெல் நடந்த செய்திகளை விரித்துக் கூறி “லான்ஸிலட்டைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை,” என்று சொன்னான்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கிடையிலும் லான்ஸிலெட் உறங்கிக் கொண்டுதானிருந்தார். நெடுநேரம் சென்று எழுந்த போது லயோனெலைக் காணாமல் அவர் அவனை த் தேடலானார். அப்போது எதிரில் வந்த கந்தை ஆடை உடுத்த ஒரு மாது தன்னைத் துன்புறுத்தும் ஒரு போலி வீரனிடமிருந்து தன்னை விடுவிக்கும்படி கோரினாள். அங்ஙனமே செய்த பின்