பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் 36

62

அம்மாது துர்க்கைனைப் பற்றியும், அவனால் கொடுமைக் குட்படுத்தப் படும் வீரரைப் பற்றியும் கூறினாள். லான்ஸிலட் அவள் காட்டிய வழியே துர்க்கைனின் மாளிகை நோக்கிச் சென்றான்.

வழியிலேயே துர்க்கைன் காயம்பட்ட வீரன் ஒருவனை இழுத்துக் கொண்டு வந்தான். லான்ஸிலட் அவ்வீரனை விடுவிக்கும்படி துர்க்கைனுக்கு ஆணையிட்டார். துர்க்கைன் மறுக்கவே, லான்ஸிலட் அவன் மீது போர் தொடங்கினார். லான்ஸிலட்டின் வாள் வீச்சுக்கள் தான் எதிர் பார்த்ததைவிடக் கடுமையாயிருக்கவே துர்க்கைன் அவரை நோக்கி, "உன் வலிமையைப் பார்க்க நீ என் மாபெரும் பகைவன் லான்ஸி லட்டிடம் பழகியவன் போலிருக்கிறதே!” என்றான். லான்ஸிலட், "நான் லான்ஸிலட்டுடன் பழகியவனல்ல; லான்ஸிலட்டேதான். உன் முடிவு நெருங்கிவிட்டதாகையால் உன் திறமையையும் காட்டிப் போர் செய்க,” என்றான்.

முழுத்

சிறிது நேரத்தில் துர்க்கைன் பிணமாய் நிலத்தில் வீழ்ந்தான். காயம்பட்டுத் தூக்கிக் கொண்டு வரப்பட்ட வீரனாகிய கஹேரிஸ் பெருந்தகை விடுவிக்கப்படவே அவன் துர்க்கைன் வேலையாளிடமிருந்த திறவுக் கொத்தை வாங்கிக் கொண்டு சிறைப்பட்ட வீரரை விடுவிக்கச் சென்றான்.

க.

பார்க்கத்

லான்ஸிலட் தம் வீரர்களைக் கூடப் தங்கவில்லை. அவர்களைக் கூட்டிக் கொண்டு காமிலட்டுக்கு வரும் வேலையைக் கஹேரிஸினிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் மேலும் சென்று, இன்னும் பல தீய வீரரையும் மாயாவி வஞ்சகர்களையும் அழித்துப் பிரிட்டன் முற்றிலும் அமைதியைப் பரப்பினார். இறுதியில் ஆர்தர் நடத்திய ஒரு விருந்தினரிடையே அவர் வந்து அரசனையும் தாம் விடுவித்த வீரரையும் கண்டு இன்புற்று வாழ்ந்தார்.

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

4.

Sir Turquine of the manor.

Sir Lionel.

Sir Ector.

Sir Gaheris.