பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அப்பாத்துரையம் 36

அரசனிடம் வந்து "அரசே! என் தலைவி லியோனிஸ் பெருமாட்டியின் மாளிகையைச் செவ்வெளி நாட்டுச் சிவப்பு வீரன். முற்றுகையிட்டுத் தொல்லைத் தருகிறான். உங்கள் வீரருள் ஒருவனை அனுப்பி அவளை மீட்டுத் தருமாறு வேண்டுகிறேன்” என்றாள்.

அரசர் அவளுக்கு விடை தருவதற்கு முன்னால் போமென்ஸ் முன் வந்து, “அரசே! ஓர் ஆண்டுக்கு முன் நான் கோரிய இரண்டு வரங்களும் நிறைவேறவேண்டும் நாள் இது. என்னை இம்மாதுடன் லியோனிஸ் பெருமாட்டியை மீட்கும்படி அனுப்புவது ஒரு வரம். வட்டமேடை வீரருள் தலைமை கொண்ட லான்ஸிலட் பெருந்தகையை என்னுடன் அனுப்பி நான் வேண்டும் போது என்னை வீரனாக்குவிப்பது மற்றொரு வரம்,” என்றான்.

மன்னர் மகிழ்ச்சியுடன் இணங்கினார். ஆனால் லினெட் என்ற பெயருடைய அம்மங்கை முகம் கோணிற்று. "பெரும் புகழ்பெற்ற அரசரென்று இவரிடம் வந்தால், என் பின் மாண்புமிக்க தலைவியை மீட்க ஒரு தூய வீரனை அனுப்பாமல் அதற்கு மாறாக முகத்திலடித்தது போல ஒரு பணிப் பையனையா அனுப்புவது?” என்று அவள் முனகிக் கொண்டாள்.

போமென்ஸ் அவள் முகச் சுளிப்பைக் கவனியாமல் அவள் பின் சென்றான். மன்னனிடம் அவன் கேட்டுக் கொண்டபடியே லான்ஸிலட் பெருந்தகையும் அவனுடன் சென்றார்.

அரண்மனையை

விட்டு

வெளியே வரும்போது போமென்ஸ் முன், ஒரு சிறுவன் நல்ல கவசத்துடனும் ஓரழகிய குதிரையுடனும் காத்து நின்றான். போமென்ஸ் கவசத்தை அணிந்து குதிரையை நடத்திக் கொண்டு சென்றான்.

போமென்ஸ் அடிசிற்கூடத்தில் வேலையாளாயிருக்கையில் அவனையும் பிறவேலையாட்களையும் அப்பகுதியில் தலைவரான கேப் பெருந்தகை கொடுமையாக நடத்தி வந்தார். தம் கீழ் வேலையாளாய் இருந்தவன் பெரிய வீரனாக முயற்சி செய்வது அவருக்குப் பொறுக்கவில்லை. "ஆர்தர் ஆகட்டும்; வேறு யாராகட்டும், என் கீழ் வேலை செய்யும் வேலையாளை என்