பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

65

இணக்கமின்றி வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது,” என்று கூறிக்கொண்டு அவர் போமென்ஸைத் தடைசெய்ய வந்தார். போமென்ஸ் அவரிடம் “உம் வேலையின் மதிப்புப் பெரிதுதான். ஆனால் உமது உள்ளம் சிறுமைப் பட்டது. ஒருவர் தமக்கு மேலுள்ளவரிடம் கெஞ்சுவதில் பெருந்தன்மை யில்லை. கீழ் உள்ளவரிடம் பரிவு காட்டுவது தான் பெருந்தன்மை என்பதை அறியாத நீர் ஒரு வீரரா? என்றான்.

கேப் பெருந்தகைக்குச் சினம் மூக்கையடைத்தது. அவர் தம் வாளின் பின்புறத்தால் அவனைத் தட்ட எண்ணினார். போமென்ஸ் தன் வாளுறையால் அதனைத் தடுத்து வீசி எறிந்தான். பின்னும் அவர் எதிர்க்க, போமென்ஸ் அவரை எளிதில் வீழ்த்தி, "ஆர்தரிடமே சென்று மன்னிப்புப் பெறுவீராக,” என்று கூறி அனுப்பினான்.

அதன்பின், போமென்ஸ், லான்ஸிலட்டிடம் மண்டியிட்டு நின்று, “என் வீரத்தை ஓரளவு உமக்குக் காட்டினேன்; என்னை வீரனாக்குக,” என்றான். லான்ஸிலட் அகமகிழ்வுடன் தம் வாளால் அவன் தலையைத் தொட்டு "நீ ஆர்தர் வீரருள் ஒருவனாய் எழுந்து பணியாற்றுக,” என்றார்.

அவர் விடைகொள்ளுமுன் போமென்ஸ் அவரிடம் நம்பகமாகத் தான் இன்னான் என்பதைத் தெரிவித்தான். அவன் வேறு யாருமல்லன்; கவேயின் பெருந்தகையின் தம்பியும், ஆர்தரின் மருமகனுமாகிய காரெத்தே என்று கேட்டு லான்ஸிலட் பெருமகிழ்ச்சி கொண்டார்.

போமென்ஸ் என்று இதுகாறும் அழைக்கப்பட்ட காரெத் பெருந்தகை தன் குதிரையை விரைவாகச் செலுத்தி லினெட்டைப் பின்பற்றினான்.

தற்பெருமையும் வீம்பும் மிக்க லினெட், காரெத்தை அருகில் கூட வரவொட்டாமல் அவமதிப்புடன் நடத்திக் கடுமொழிகள் பேசினாள். "சீ! என் அருகில் வராதே! என்னதான் உடை மாற்றினாலும் நீ அண்டி வரும்போது கறிச்சட்டி நாற்றம் வீசுகிறது. அகப்பைகளைக் கழுவும் இக்கையா சூரர்களையும் கலங்கவைத்த செவ்வீரனை எதிர்க்கப் போகிறது? வேண்டாம்!