பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

69

லியோனிஸ் பெருமாட்டி பருமாட்டி காரெத்தை அன்புடன் வரவேற்றாள். ஆயினும் அவள் அனிடம், "உன் வீரவாழ்வு இப்போதே தொடங்கி இருக்கிறது. அதனைப் பிஞ்சிலேயே நான் தடைசெய்யக் கூடாது. இன்னும் பன்னிரண்டு திங்கள் வீரமாதின் அருள் வழி நின்று மீண்டும் வருக. நான் உன் புகழையே என் உயிராய்ப் போற்றி நின்று உன்னையடைவேன்,” என்றாள்.

போமென்ஸ் என்ற பெயர் துறந்து காரெத் என்ற பெயருடன் மன்னரும் மன்னவையும் மகிழ்ந்துப் பாராட்டக் காரெத் பல அரும் பெருஞ் செயல்களாற்றி ஓராண்டிலேயே நூறாண்டுப் புகழ்பெற்று தன் உள்ளத் திறைவியாகிய லியோனிஸ் பெருமாட்டியை மணந்தான். அவன் உடன் பிறந்தானாகிய கரெயின் பெருந்தகை லியோனிஸ் பெருமாட்டியின் தோழியாகிய லினெட்டை மணந்து

கொண்டான்.