சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
71
விடாமல் வாயிலை அடைத்து விடவே, “எப்படியும் இனி இந்நகரில் தங்கி இவர்களை ஒருகைப்பார்த்துவிட்டுச் செல்வோம்," என்று எண்ணிக் கொண்டு நகரினுள் நுழைந்தான்.
நகரில் அன்றைய இரவு முற்றும் விளக்கொளியில் மக்கள்
விரைந்து வேலை செய்தும் பரபரப்புடன் ஓடியாடியும் விழாவுக்க வேண்டிய ய ஆயத்தங்கள் செய்பவர்போற் காணப்பட்டனர். செய்தி யாது? என்ற கேள்விக்கு யாரும் மறுமொழி தரக்கூட நேரமின்றிப் பரபரப்புடன் அவனைக் கடந்து சென்றனர். தங்க இடமாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தான்; அதற்கும் வழியில்லை. இறுதியில் ஒரு கிழவன் இன்று உனக்கு இடம் வேண்டுமானால் ஒரே ஓர் இடம்தானுண்டு. நகருக்கு வெளியில் பாழாய்க் கிடக்கும் பழைய கோட்டைக்குச் செல்க, என்றான்.
கெரெய்ன்டு அங்ஙனமே நகர்ப்புறத்துக்கு மீண்டும் வந்தான். வீரனும் மங்கையும் நுழைந்த கோட்டை எதிரில், டிந்து தகர்ந்த ஒரு பழங் கோட்டையைக் கண்டு அவன் அதில் நுழைந்தான். அங்கிருந்த ஒரு முதியவன் அவனை வரவேற்று அதில் அதிகம் இடிந்து பொடியாகாத ஓர் அறைக்குக் கொண்டு சென்றான். அங்கே அவன் மனவிையாகிய மூதாட்டியும், கந்தையாடையிலும் கட்டழகு மாறாத காரிகையாகிய அவன் புதல்வியுமிருந்தனர். அவர்களும் அவனை விருந்தாக ஏற்று முகமன் கூறினர்.
அவர்கள் வாயிலாக கெரெய்ன்டுக்கு அரசியை அவமதித்த வீரனைப் பற்றிய விவரமும், மறுநாளைய விழவைப் பற்றிய விவரமும் தெரியவந்தன. அவன் அந்நாட்டில் நன்மக்களை நெடுங்காலம் துன்புறுத்தி வந்த பருந்து வீரன் என்ற புனைபெயருடைய எடிர்ன்' என்பவனே. அந்நகரில் நெடுநாள் வாழ்ந்த பழங்குடியினனாகிய அப்பழங்கோட்டை வீரனை திர்த்து அவன் அக்கோட்டையை அழித்து அதிலுள்ள செல்வமனைத்தையும் கொள்ளையிட்டு, அச்செல்வத்தால் புதிய கோட்டை கட்டி நகரில் ஆட்சி புரிந்துவந்தான். அவ்வெற்றி நாளைக்கொண்டாடு முறையில்தான் அதன் ஆண்டு நிறைவாகிய மறுநாளில் அவன் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதில் அவன் தன்னை எதிர்க்க முன்வரும் வீரரனைவரையும் வென்று வெற்றி மாலை சூடவும் திட்டமிட்டிருந்தான்.