சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
75
ஆர்தர் நல்லெண்ணமின்றித் தீய எண்ணங்களுக்கே இடந்தராத தூய உள்ளம் படைத்த மன்னர். தாம் செய்ய வேண்டும் கடமைகளுள் ஒன்று செய்யப்படாமலிருக்கிறது என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் சுறுக்கெனத் தைத்தது. ஆயினும் தம் புகழின் தவமணியாகிய கெரெய்ன்டு தன் குறைவை நிறைவுபடுத்தி விடுவான் என்ற கருத்துடன் அவர் அவனுக்கு விடை தந்தார்.
கெரெய்ன்ட் மனைவியுடன் தன் நாடு சென்று அவளுடன் இனிது வாழலானான்.
இன்ப வாழ்வைத் தூய்மைப்படுத்துவது வீரம். ஆர்தரின் வட்டமேடையின் தொடர்பு கெரெய்ன்டின் வாழ்வைத் தூய்மைப்படுத்தியவரை அவன் மனைவியைத் தொலைவி லிருந்தே அன்பு செலுத்திவந்தான். டெவனில் வந்ததும், அவன் கடமைகளையெல்லாம் மறந்து அவளுடைய மாடத்திலேயே இருந்து இன்ப வாழ்க்கையில் மூழ்கினான்.
மற்றக்
"பிறர் துன்பந்துடைத்த வீரன்" என்று புகழ் படைத்த கெரெய்ன்டு மணவாழ்வில் புகுந்ததும் "தனது இன்பமே நாட்டமாய் விட்டான். அவன் வீரம் கெட்டு விட்டது,” என்று பலரும் பேசினர். எனிட் காதுவரை இது எட்டிற்று. தோழியர் பலர், "தமது நற்பேறே பேறு. தம் கணவர் தம்மையன்றி வேறெதிலும் நாட்டம் கொள்வதில்லை." என்பர். எனிடின் காதுகளுக்கு அதுகூடத் தன்னைக் குத்தலாகப் பேசியது என்று பட்டது.
தூய வீரன் என்று பெயர் படைத்த தன் கணவன் தன் உறவால் கெட்ட பெயரெடுக்கும்படியானது தன் குற்றமே என்று அவள் எண்ணினாள்.
ஆனால் அவள், தன் கண்ணெனப் போற்றிய தன் கணவனிடம் அவனுக்குக் கண்ணுறுத்தலாகும் இவ்வுண்மை யினை எங்ஙனம் கூறுவாள்? கடமை ஒருபுறம் செல்லும்படி முன் தள்ள, கணவனிடம் கொண்ட இயற்கைப் பற்றுப் பின் தள்ள, அவள் பலவாறு அலைக்கழிவு எய்தினாள்.
அவள் துயர் அவள் முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்டது. கெரெய்ன்டு அதனைக் கண்ணுற்றான். ஆனால், அது பற்றிய