பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

அப்பாத்துரையம் - 36

வினாக்கள் அவளைத் தலை குனிந்து முகங் கோணச் செய்தனவேயன்றி வேறெதுவும் விடை தருவிக்கவில்லை.

கினிவீயர் போன்ற பெண்மணிகளின் புற அழகின் பின் அகத்தில் கறையிருக்கக் கூடும் என்ற நச்செண்ணம் அவன் தூய உள்ளத்தில் சற்றே வீசிற்று. அது நிலைக்கவில்லையாயினும் அதன் சாயல் அவன் உள்ளத்தில் அவனும் அறியாமலும் மறைந்து தங்கி நின்றது.

இன்ப வாழ்வில் சொக்கிய கெரெய்ன்டு இரவில் அயர்ந்து உறங்குவான். மக்கள் இகழ்ச் சொற்களெல்லாம் உருப்பெற்று எனிடின் மனக்கண்முன் நின்று அவள் உறக்கத்தைக் கெடுக்கும்.

ஒருநாள் விடியற்காலமாயிற்று. கெரெய்ன்டு இன்னும் உறங்குகிறான். எனிட் அவன் பக்கத்தில் நின்று அவன் மாசற்ற முகத்தை நோக்கிய வண்ணம் தன் மனக்குறையை வாய்விட்டுக் கூறினாள். “என் கணவன் புகழுக்கு இழுக்காக வாழ்வதிலும் மாள்வதே மேல். உண்மையில் போரில் புகழ்பெற்றுக் கணவன் மாண்டு விட்டால்கூட மகிழ்ச்சியுடன் உடன் சாவேன் கெரெய்ன்டுக்கு நான் மனைவியானால் அவன் மாண்டும் நான் புகழ் பெறுக, வெளிவந்தன.

என்ற சொற்களை அவளையறியாமல்

எனிட் இச்சொற்களைச் சொல்லி முடிப்பதற்குள் அவள் கைப்பட்டு எனிட் தலையணி தடாலென்று விழுந்தது. அவ் ஓசையால் அவன் விழித்துக் கொண்டான். விழிக்கும்போது அவள் கூறியவற்றிலுள்ள கடைசி வாசகம் அவன் காதில் விழுந்தது. முன்பின் தொடர்பில்லாமல் கேட்டதால், அது அவனுக்குத் தப்பெண்ணத்தை ஊட்டிற்று. அவன் மாண்டும் நான் புகழ் பெறுக' என்ற வாசகம். “அவன் மாண்டு நான் புகழ் பெறுக,” என்று அவன் காதில் விழுந்தது.

ஐயத்தின் பழைய சாயல் இப்போது வாலும் தலையும் பெற்று ஐயப் பேயுருவமெடுத்தது. தன் மனைவியின் அன்பு வேறு பக்கம் போயிருப்பதால், தான் மாண்டு அவள் வாழ்வு நிறைவடைய வேண்டும் என்று அவள் விரும்புவதாக அவ் ஐயப்பேய் கதை கட்டிவிட்டது.