பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

77

தூய உள்ளத்திலும் அன்பு மிகுதியாயுள்ள இடத்திலும் தான் ஐயப்பேய் தன் முழுச் சிறகையும் விரித்துத் தாண்டவமாடும். கெரெய்ன்டுக்குத் தன் இன்ப வாழ்வு எட்டிக்காயாயிற்று. மனைவி மீது சீற்றங் கொதித்தெழுந்தது.

அவளைத் துன்பத்துக்காளாக்கி அவள் உள்ளத்துள் மறைந்து கிடந்த (அதாவது மறைந்து கிடந்ததாகத் தான் காண்ட) தீய எண்ணங்களை முற்றிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவன் எண்ணினான்.

மறுநாள் கெரெய்ன்டு எனிடிடம் உன் ஆடை அணிகளை எறிந்து விட்டு மாசடைந்த உடையுடன் வருக என்றான். கணவனுக்கெதிராக நாம் என்ன செய்து விட்டோமோ என்று அவள் நடுநடுங்கினாள். நல்ல காலத்தில் நல்லுரை கூறவே நாவெழாத அவளுக்கு இப்போது எங்கே நாவெழப் போகிறது? அவள் மணவினைக்கு முன் தன் தாய் வீட்டில் அணிந்திருந்த பழங்கந்தையுடன் வந்தாள்.

கெரெய்ன்டு அவளை முன்னால் ஒரு குதிரை மீதேறிச் செல்லச் செய்து, தான் பின்னே சென்றான். அதோடு என்ன நேரினும் நான் பேசச் சொன்னாலன்றி என்னிடம் பேசப்படாது என்று கடுமையான உத்தரவிட்டான்.

கணவனுடன் காட்டிற்குள் செல்வது பற்றி அவளுக்குக் கவலையேயில்லை. ஆனால் அவனுடன் உரையாடக் கூடாதென்பது அவளுக்கு மிகவும் துன்பந் தந்தது. அவ்வளவுக்கு அவன் அன்பை இழக்க நான் என்ன செய்திருப்பேன் என்று பலவகையில் ஆராய்ந்து ஆராய்ந்து அவள் தன் மனத்தைப் புண்படுத்திக் கொண்டே சென்றாள்.

கெரெய்ன்டு மனத்திலும் “நான் இவளைத் தெய்வமாகத் தானே நடத்தினேன். எனக்கா இந்நன்றி கொன்றதனம்” என்ற எண்ணமெழுந்து வாட்டியது.

அவர்கள் சென்ற காட்டுவழி, முன் போர் வீரராயிருந்து கொள்ளைக்காரராக மாறித்திரிந்த கொடியோர் வாழ்ந்த டமாயிருந்தது.

இருவரும் ஒரு மேட்டிலேறிச் சென்ற சமயம் எனிட் ஓர் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். புதரில் மறைந்திருந்த