பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அப்பாத்துரையம் 36

மூவர் தமக்குள் பேசிக் கொண்டது அவள் காதிற்பட்டது. ஒருவன் இந்த அழகிய மாதைப் போக விடு. அந்த கோழைப் பயலைப் பின்னாலிருந்து நொறுக்கி விட்டு எல்லாம் ஒரு கை பார்க்கலாம்,” என்றான் அடுத்தவன் “சரி சரி” என்றான்.

66

கணவன் உயிருக்கு அஞ்சிய காரிகை அவன் ஆணையை மீறத் துணிந்தாள். 'இதோ மூவர் உங்களை எதிர்க்கக் காத்திருக்கின்றனர்," என்றாள்.

கெரெய்ன்டு கடுமையாக "அந்த மட்டும் உனக்கு நன்மைதானே. ஆயினும் யாரும் என்னை வென்றுவிட முடியாது என்று அறி" என்று கூறித் தன் ஈட்டியை எடுத்தான்.

கெரெய்ன்டு முதலில் பெற்றிருந்த புகழைப் போலவே அவனைப்பற்றிய பின்னாலெழுந்த இகழும், காடுவரை எட்டியிருந்தது. ஆனால் பின்னது எவ்வளவு பொய்யானது என்பதை அம் மூவரும் விரைவில் உணர்ந்தனர். ஒருவன் நெஞ்சில் கெரெய்ன்டின் ஈட்டி ஊடுருவிப் பின்புறம் சென்றது. மற்ற இருவரும் வாளுக்கிரையாயினர்.

கெரெய்ன்டு இறந்த வீரரின் கவசத்தை அகற்றி அவர்கள் குதிரை மீதேயிட்டுத் தன் குதிரையுடன் அவற்றையும் ஒட்டிமுன் செல்லுமாறு எனிடுக்கு ஆணையிட்டான்.

நான்கு குதிரைகளை ஓட்டுவதில் அவள் படுந்துன்பங் கண்டு அவன் இறங்கி, சற்று அண்டி வந்து உதவினான். அவளுக்கு அது ஆறுலாயிருந்தது. ஆயினும் தன் எச்சரிக்கை கேட்டு அவன் கூறிய மறுமொழிகளின் பொருளறியாமலும் அவற்றுள் புதைந்து கிடந்த வெறுப்பைக் கண்டும் அவள் மனமாழ்கினாள்.

பின்னும் ஒரு தடவை வேறு சில திருடர் மறைந்து கெரெய்ன்டை எதிர்க்க முற்பட்டனர். இத்தடவையும் எனிட் எச்சரிக்கையின் பேரில் கெரெய்ன்டு மூவரையும் தென்புலத்துக் கனுப்பினான். இப்போதும் எனிடிடம் அவன் கடுமை நீங்கவில்லை. முன்னைய மூன்று குதிரைகளுடன் பின்னும் மூன்று குதிரைகள் அவள் பொறுப்பில் விடப்பட்டன.

ஒருநாள் முழுவதும் குதிரை மீது சென்றதால் இருவருக்கும் பசி காதடைத்தது. வெறுப்பினிடையும் கெரெய்ன்டிற்கு எனிட்