பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

79

மீது இரக்கம் பிறந்தது. அவர்கள் காட்டைக் கடந்து ஓர் ஊரை அடைந்ததும் அறுவடைக் களத்துக்கு உணவு கொண்டு சென்ற ஒரு பையனை அழைத்து அவன் உணவு கோரினான். எனிட், கணவன் காட்டிய வெறுப்பினால் உணவில் விருப்பஞ் செல்லவில்லை யாயினும், உண்பதாகப் பாசாங்கு செய்தாள். பசியிடை அதை அறியாத கெரெய்ன்டு இருவரும் உண்பதாக அதைஅறியாத எண்ணி அத்தனையும் உண்டு தீர்த்தான். பின் பையனிடம் உணவுக்கு மாறாக ஒரு குதிரையையும் கவசத்தையும் கொடுத்தான்.

பையன், கெரெய்ன்டு ஒரு பெரிய வீரன் என்பதை அறிந்து தன் ஊர்த்தலைவனிடம் அவனை இட்டுச் செல்ல விரும்பினான். கெரெய்ன்டு அதனை மறுத்து ஒரு விடுதியில் அறையமர்த்தி அதில் எனிடை ஒரு மூலைக்கனுப்பித் தான் ஒரு மூலையில் இளைப்பாறலானான்.

பையன், ஊரெல்லாம் தன் குதிரையைக் காட்டி வீரன் வள்ளன்மையைத் தமுக்கடித்தான். அதுகேட்ட தலைவன் பரிவாரங்களுடன் கெரெய்ன்டைப் பாராட்ட வந்து விட்டான்.

அத்தலைவன் உண்மையில் முன் எனிடை நாடிச் சென்று அவளைப் பெறாது மீண்ட லிமூர்ஸ்' என்பவனே. அவன் கெரெய்ன்ட் எனிடைப் புறக்கணித்து நடத்துவதைக் கவனித்து அவளிடம் தனிமையில் உன்னைப் புறக்கணிக்கும் இவனை விட்டு வந்துவிடு. அவனைக் கொன்றுவிட்டுக் கூட உன்னை நான் அடையத் துணிந்திருக்கிறேன் என்றான்.

கணவன் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அவனைக் காக்க எண்ணிய எனிட் “அவனைக் கொல்ல வேண்டியதில்லை. நாளைக் காலையில் வா; உன்னுடன் வந்து விடுகிறேன்,” என்று கூறினாள்.

இரவு முற்றும் எனிட் உறங்கவில்லை. விடியுமுன் கெரெய்ன்டிடம் இச் செய்தியைக் கூறினாள். இம்முறை கெரெய்ன்ட் அவளிடம் அவ்வளவு கடுமை காட்டவில்லை. ஏனெனில், அவன் சினத்தின் ஒரு பகுதி நய வஞ்சகனான லிமூர்ஸிடம் சென்றது.