பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அப்பாத்துரையம் - 36

கெரெய்ன்டின் வெறுப்பு முற்றும் பஞ்சாய்ப் பறந்து போயிற்று. அவன் வாளெடுத்துக் கொண்டோடி வந்தான். ஒரு நொடியில் டூர்மின் தலை மண்ணில் புரண்டது.

தலைவன் நிலைகண்ட அவன் ஆட்கள் நெறிகலங்கி

ஓடினர்.

கெரெய்ன்டு எனிடின் கையைப் பிடித்துக் கொண்டு, 'நான் என் செவியை நம்பி ஏமாந்தேன். அறிவைப் பறி கொடுத்தேன். எதில் ஐயம் கொண்டாலும் இனி உன்னிடம், உன் கால்பட்ட இடத்தில் கூட ஐயங் கொள்ளேன்,” என்று அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

கெரெய்ன்டு குதிரை மீது எனிடுடன் வெளியே வருகையில் முன் அவனை எதிர்த்துத் தோற்றிருந்த வீரனாகிய எடிர்ன்3 அவர்களுக்கு வணக்கம் செய்து தான் தற்போது முற்றிலும் மனந்திருந்தி ஆர்தரின் வீரருள் ஒருவனாய் விட்டதைத் தெரிவித்தான்.

கெரெய்ன்டு இன்ப வாழ்க்கையில் கடமை மறந்து விட்டான் என்று கேட்டு டூர்மைத் தாமே எதிர்க்க வந்த ஆர்தர் நடந்ததனைத்தும் கேட்டுக் கெரெய்ன்டை முன்போல் அன்புடன் வரவேற்றார்.

கெரெய்ன்டையும்

எனிடையும் சுற்றிச்

சிறிய

கெரெய்ன்ட்களும் சிறிய எனிட்களும் தோன்றி அவர்கள்

வாழ்வை அழகு செய்தனர்.

அடிக்குறிப்புகள்

1.

Limours

2. Doorm.

3.

Edyrn