76
அப்பாத்துரையம் – 37
அவள் தமக்கையார் இருவரும் தந்தையிடம் பேரன்பு கொண்டவராக நடித்தனர்; ஆனால், கார்டெலியா உண்மை யாகவே, பேரன்பு கொண்ட உள்ளத்தினள்; அவள் வாய்ச் சொற்கள் நன்றியற்றவை போல இருந்தன. அவள் தமக்கையரை விட அன்பு மிக்க சொற்கள் பேசியிருத்தல் கூடும். ஆனால், தமக்கையர் தந்திரமாய்ப் பேசிய போலிப் பேச்சைக்கேட்டு அப்பேச்சிற்காக அவர்கள் பெற்ற பெரும் பரிசுகளை அறிந்த பின்னர், அவளால் அவ்வாறு பேச முடியவில்லை; அன்பைச் செலுத்தி அமைதியாய் ஒழுகலே தக்க தொன்று என அவள் எண்ணினாள்.அதனால், அவள் கொண்ட அன்பு தூய்மையானது என்பதும், பொருளாசையால் மேற்கொண்ட போலியன்று என்பதும் புறத்தே தமக்கையரை விடஆரவாரம் குறைந்த அளவிற்கு அகத்தே உண்மை நிறைந்திருந்தது என்பதும் அறியலாம்.
ஆனால், மன்னன் இப்பேச்சைச் செருக்குக் கொண்ட தென்றான்; தன் மகளின் வஞ்சகமற்ற தன்மையை அறியாமல் சினந்தான். இயற்கையாகவே அவன் ஆத்திரம் உடையவன்; உண்மையான பேச்சு எது, வெறும் புகழுரை எது, உள்ளத் தினின்றும் பிறந்த சொற்கள் எவை. பொருளற்ற போலி மொழிகள் எவை எனப் பிரித்தறியும் திறனும் முதுமையின் காரணமாக அவனிடம் இல்லை. அறியாது கொண்ட சினத்தால், அவன் தன் நாட்டின் மூன்றாம் குதியை கார்டெலியாவின் பொருட்டு ஒதுக்கி வைத்தருந்த செல்வத்தை - அவளுக்குத் தாராமல், அவளுடைய தமக்கையார்க்கும் அவர் தம் கொழுநர்க்குமாகத் தந்து விட்டான்.
அவர்களையும் அவர்களுடைய கொழுநரையும் லியர் தன்
அரசவைக்கு வரவழைத்தான். அமைச்சர் முதலானோர் கூடியிருந்த அந்த அவையில் அரசுரிமையை அவர்களிடம் ஒப்புவித்தான்.படை, செல்வம் முதலியன யாவும் அவர்களைச் சார்ந்தன. அரசன் என்ற வெறும் பட்டத்தை மட்டும் தன்பால் நிறுத்திக் கொண்டான். தனக்கு ஏவலராக வீரர் நூற்றுவர்
ருக்கப் பெற்றான். தன்னையும் அவர்களையும் தன் பெண்கள் இருவருள் ஒருவர் தம் அரண்மனையில் வைத்துத் திங்கள் முறையாகப் போற்ற வேண்டும் என்றும் ஏற்பாடு செய்தான்.
ஆராய்ச்சி இன்றி ஆத்திரங்கொண்டு அரசன் தன் நாடுபற்றிச் செய்த தகுதியற்ற முடிவினைக் கண்டு, அமைச்சர்