சேக்சுபியர் கதைகள் - 1
87
புயலால்விலங்குகளும் அஞ்சி ஒதுக்கிடத்தில் ஒதுங்கி விட்டனவே. அச்சமும் துன்பமும் தாங்கல் மக்களுக்கு இயற்கையன்றே,” என்று கேயஸ் முறையிட்டான். லியர் அவனைக் கடிந்து நோக்கி “இத் துன்பங்கள் மிகச் சிறியவை. மிகப் பெரிய துன்பம் வாட்டும்போது இவை தெரிவதில்லை. மனம் ஓய்ந்திருக்கும்போது உடல் இன்ப நுகர்ச்சியை விழையும். என் மனத்தில் பெருங்குழப்பம் ஒன்று உள்ளதே. அந்த ஒன்று தவிர வேறெதுவும் என் புலன்களில் படுமோ? பெற்றோரிடம் நன்றிகெட்டு நடத்தல் ஆ! எவ்வளவு கொடியது! தனக்கு உணவு நல்கும் கையினைக் கடிந்து அழிக்கும் வாயின் கொடுமை போன்றது அன்றோ அது? மக்களுக்குக் கையாகவும் உணவாகவும் மற்றெல்லாமாகவும் உதவுபவர் பெற்றோரே அல்லரோ?” என்றான்.
ஆனாலும், கேயஸ் தன் வேண்டுகோளைவிடாது, திறந்த வெளியில் மன்னன் இருத்தல் ஆகாது என்று வற்புறுத்தினான்; அப் பாலையில் இருந்த பாழடைந்த தொரு குடிலினுள் தங்குமாறு வேண்டினான். மன்னனும் இசைந்தான். நகைச்சுவையாளன் முதலில் அதனுள் நுழைந்ததும் அஞ்சி ஓடிவந்துவிட்டான்; அதனுள் ஆவி ஒன்று இருப்பதாக அலறினான். ஆனால், உட்புகுந்து பார்த்தபோது அங்கே ஆவி ஒன்றும் இல்லை; ஏழை இரவலன் ஒருவனே இருந்தான். அவனும் புயலின் கொடுமைக்கு அஞ்சி அதனுள் தங்கினவனே, அவன் பேய்களின் செயல்களைக் கூறத் தொடங்கினான்; நகைச் சுவையாளன் அவற்றைக் கேட்டு அஞ்சினான்.
இரக்கம் மிகுந்த நாட்டுப்புற மக்களிடம் பொருள் பெற்று வாழும் பித்தரும், பித்தர்போல் நடிப்பவரும் ஆகிய சிலர் உள்ளனர். அவர்கள் நாட்டுப்புறங்களுக்குச் சென்று டாம்' முதலிய பெயர்கள் சொல்லிக் கொண்டு, தாம் திக்கற்றவர் என்று முறையிட்டு, ஏதேனும் பொருள் உதவுமாறு வேண்டுவர்; ஊசி, ஆணி, முள் முதலியவற்றால் தம் கைகளில் குத்திச் செந்நீர் வருவிப்பர். இதுபோன்ற கொடுஞ் செயல்களுடன் வேண்டு கோள்களால் மக்கள் இனம் இரங்குமாறு செய்வர்; அல்லது பித்தர் போல நடித்துச் சாபங்கொடுப்பதால் அம்மக்களை அச்சுறுத்துவர்.மனம் இரங்கியோ அஞ்சியோ மக்களும் பொருள் ஈவர். அத்தகைய இரவலருள் ஒருவன் அக்குடிலில்