100 ||
அப்பாத்துரையம் – 37 என்று
கூடாது
காட்சியை எவர்க்கும் சொல்லுதல் ஹொரேஷியோ, மார்ஸெல்லஸ் இருவரையும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான்.
ஹாம்லெத் முன்னரே மெலிந்து சோர்வுற்றிருந்தான். ஆவியுருவத்தைக் கண்ட பின் அவன் மனம் குன்றிக் குலைந்தது; அவன் அறிவும் தடுமாறியது, "இந்த நிலைமை நீடிக்குமானால், பலரும் என்னைப் பற்றி ஆராய்வர்; என் சிற்றப்பனும் என்னை ஐயுறுவான்; என் தந்தை இறந்த வகையை அறிந்து கொண்டு நான் பழிவாங்க முயல்வதாக அறிந்து கொள்வான். ஆதலால் நான் உண்மையான பித்தன்போல நடிப்பேன் அப்போது யாரும் என்னை ஐயுறார். என்னால் ஒரு தீங்கும் நேராது என்று என் சிற்றப்பனும் தெளிந்திருப்பான். என் மனக்கலக்கம் ஒருவருக்கும் தோன்றாமல் மறைக்கப்படும்," என்று அவன் பித்தன்போல் நடிக்கத் துணிந்தான்.
அன்று முதல் ஹாம்லெத் உடுத்த உடை, பேசிய பேச்சு, நடந்த நடை ஆகிய எல்லாவற்றிலும் மாறுதல் நிகழ்ந்தது. அவன் போக்கே புதுமையாக இருந்தது.பித்தனாக நடிப்பதில் அவன் வெற்றியே பெற்றான். அரசனும் அரசியும் அவனைப் பித்தன் என்றே நம்பினர். தந்தையின் பிரிவால் இந்த நிலைமை ஏற்பட்டதாக அவர்கள் எண்ணவே இல்லை. ஆவியுருவம் தோன்றிய செய்தி அவர்களுக்குத் தெரியாது. ஆதலால் அவன் படுந்துயரம் பெண்ணாசையால் விளைந்தது என்றே அவர்கள் முடிவாகக் கருதினார்கள். அவன் மயக்கத்தின் உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அவர்கள் மகிழ்ந்தார்கள்.
7
8
ஹாம்லெத் உள்ளத்தில் காதலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அது தந்தையின் பிரிவால் ஏற்பட்ட வருத்தத்திற்கும் பின்னதே ஆகும். அரசனுடைய முதல் அமைச்சனாகிய பொலோனியஸ் என்பவன் மகள் ஒபீலியா என்னும் கட்டழகியை அவன் காதலித்திருந்தான். அவன் தன் காதலிக்குக் கடிதங்கள் எழுதியிருந்தான்; கணையாழிகள் கொடுத்திருந்தான். தன் உண்மைக் காதலைப் பலவாறு அறிவித்திருந்தான். அவளும் அவனிடம் மெய்யன்பு கொண்டிருந்தாள். பின்னர் நேர்ந்த பேரிடரால் அவன் தன் காதலியைக் கைவிட்டான்; பித்தனாக