பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

101

நடிக்கத் தொடங்கின நாள்முதல், அவளிடம் அன்பில்லாதவன் போல் நடக்கத் தொடங்கினான்.

அந்த மங்கையர்க்கரசியோ அதற்காக அவனை நிந்தித்தாள் அல்லள். அவன் தன்னை அன்பில்லாமல் புறக்கணிக்கவில்லை என்றும், அவன் கொண்ட மன நோயே அதற்குக் காரணம் என்று அவள் மனம் தேறினாள். அவனுடைய இயற்கையான அரும் பண்புகளையும் அறிவின் மாட்சியையும் நினைந்து நினைந்து வருந்தினாள்.

தன் தந்தையைக் கொன்றவனைத் தான் கொன்று பழிக்குப்பழி வாங்கும் கொடுந்தொழிலை ஏற்றுள்ளான் ஹாம்லெத். எனவே, அவன் உள்ளத்தில் காதல் இடம்பெறுதல் கூடுமோ? அத்துறையில் காலத்தைக் கழிப்பது வீண் என்றே அவனுக்குத் தோன்றியது. ஆனாலும், இடையிடையே ஒபீலியாவைப்பற்றி அன்பான எண்ணங்களும் அவனுள்ளத்தில் எழுந்தன. தான் அவளை அன்பில்லாமல் புறக்கணிப்பது தவறு என்ற எண்ணமும் அவனுள்ளத்தில் ஒரு நாள் தோன்றியது; அப்போது அவன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்; தன் சிந்தை தடுமாற்றமும் காதற் பெருக்கும் அதில் புலப்படுத்தினான். அவள் மீது கொண்ட மெய்யன்பு அவன் உள்ளத்தில் இன்னும் உள்ளது என்பதை அக்கடிதம் அறிவித்தது. விண்மீன் ஒளி மழுங்கினும், கதிரவன் செலவு நிற்பினும், மெய்யே பொய் ஆயினும் தான் கொண்ட காதல் அழியாது என்று அதில் ஹாம்லெத் குறித்திருந்தான்.

அக்கடிதத்தை ஒபீலியா தன் தந்தைக்குக் காட்டினாள்; அவனோ அதை அரசனுக்கும் அரசிக்கும் தெரிவித்தான்.தாங்கள் முன்னமே கருதியவாறு ஹாம்லெத் கொண்ட பித்து உண்மையாகக் காதற்பித்தே என்று அரசனும் அரசியும் நம்பினார்கள். ஒபீலியாவின் ஒப்பற்ற அழகு இவ்வாறு அவன் அறிவை மயக்கிய போதிலும், அவளுடைய சீரிய நற்பண்புகளே அம்மயக்கை அழித்து நல்வாழ்வு நல்கும் என்று அரசி எண்ணினாள்.

ஆனால், ஹாம்லெத் உற்ற நோயோ, அரசி எண்ணியவாறு எளிதில் தீர்க்கக்கூடியது அன்று; அஃது ஆழ்ந்து வேரூன்றியது அன்றோ? தந்தையின் ஆவியுருவம் அவன் நினைவிலிருந்து