பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

||-– –

அப்பாத்துரையம் – 37

ஹாம்லெத்: (தந்தை என்ற அன்பும் பெருமையும் வாய்ந்த

அரிய பெயரைத் தந்தையைக் கொன்ற கீழ் மகனுக்கு வழங்கினளே என்ற சினக் குறிப்புடன்) அன்னாய்! என் தந்தைக்கு நீர் பெருந்தீங்கு இழைத்திருக்கிறீர்.

அரசி: இது வீண் பேச்சு!

ஹாம்லெத்: உமது வினா எத்தகையது?

அரசி: மகனே! நீ யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை மறந்தாயோ?

ஹாம்லெத்: அந்தோ! அந்தோ! மறந்துவிடவல்லேனாகில் நான் பெரும்பேறு பெற்றேனாவேன். நீர் யார் என அறிவேன்: அரசி; உம் மைத்துனனுக்கு மனைவி என்னுடைய தாய். ஆ! இந்த முறை இல்லாதிருந்தால் மகிழ்வேனே!

அரசி: அப்படியா? இவ்வாறு என்னை இழித்துரைப் பாயானால், உன்னிடம் பேசவல்லாரை அனுப்புகிறேன்.

இவ்வாறு சொல்லிவிட்டு அரசனையாவது அமைச்சனை யாவது அனுப்ப எண்ணி அவள் புறப்பட்டாள். ஹாம்லெத் அவளை அடியெடுத்து வைக்கவிடவில்லை. அவள் தனிமையில் இருந்தமையால், அவள் செய்த கொடுமையை அவளுக்குச் சுட்டிக்காட்டி வருத்தித் தன் குற்றத்தை உணருமாறு செய்ய முயன்றான்; அவள் கையைப் பற்றி இழுத்து உட்காரச் செய்தான். இந்தச் செயலால் அவள் அஞ்சினாள்; பித்துப் பிடித்த நிலையில் தனக்கு ஏதேனும் தீங்கு செய்திடுவான் என்று எண்ணிக் கூக்குரலிட்டாள். உடனே, திரை மறைவிலிருந்து, “அரசியைக் காக்க! காக்க!” என்று ஒரு குரல் கேட்டது. ஹாம்லெத் அதனைக் கேட்டதும், திரை மறைவில் இருந்தவன் அரசனே என்று எண்ணி, வாளை உருவி ஒலி எழுந்த இடத்தில் குத்தினான்; ஓடும் எலியை அடுத்தடுத்துக் குத்துபவன் போலப் பலமுறை குத்தினான்; ஒலி சிறிதும் இன்றி அடங்கிய பின் அரசன் இறந்துவிட்டான் என்று நம்பினான்; திரையை நீக்கிப் பிணத்தை இழுத்துப் பார்த்தான்; திரைமறைவில் இருந்து ஒற்றறிய முயன்ற பொலோனியஸ் என்னும் அமைச்சனையே தான் கொன்றமை அறிந்தான். “அந்தோ! என் செய்தாய்! சிறிதும் இரக்கமின்றிப் படுகொலை செய்தாயே,” என்று அரசி அரற்றினாள். “அன்னாய்! இது