பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

அப்பாத்துரையம் – 37

ஹாம்லெத் பற்பல எடுத்துக் கூறினான். இச்சொற்களைக் கேட்ட அரசி உற்ற வெட்கத்திற்கு அளவே இல்லை. தன் குற்றத்தைத் தன் மகன் தெளிவாக அறிந்தமைபற்றி அவள் மிகவும் நாணினாள். தான் செய்த குற்றமும் தனது ஒழுக்கக்கேடும் எத்துணைக் கொடுமை நிறைந்தவை என்பதும் அவள் தன்னுள் உணர்ந்தாள்.

மீண்டும் ஹாம்லெத் தாயைப் பார்த்து, “அன்னையே! உம்முடைய முதற்கொழுநரைக் கொன்று அவர் அரசைக் கவர்ந்த கள்ளனுக்கு மனைவியாகி, அவனுடன் கூடி வாழ்கின்றீரே! அஃது எங்ஙனம் இயலும்?” என்று கேட்டான். அப்போது திடீரென்று இறந்த மன்னனது ஆவியுருவம் அந்த அறையில் தோன்றியது. அச்சத்தால் நடுநடுங்கிக் கொண்டே ஹாம்லெத் அவனைப் பார்த்து, வந்த காரணம் கூறுமாறு கேட்டான். “நீ பழி வாங்கும் கடமையை மறந்து விட்டனையோ? அதனை உனக்கு நினைவூட்டவே இப்போது வந்தேன். உன் தாய் அடைந்துள்ள அச்சமும் துயரமும் அவளைக் கொல்லவல்லன். ஆகையால் நீ அவளுடன் பேசி ஆறுதல் அளி,” என்று ஆவியுருவம் கூறி மறைந்தது.ஹாம்லெத் தவிர வேறு யாரும் அதைக் காணவில்லை. அது நின்ற இடத்தைச் சுட்டியும் வந்த கோலத்தைக் கூறியும் தாய்க்கு அவன் கூறி விளக்க முயன்றும், அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அங்கு ஒருவரும் இல்லாதிருக்கவும் ஹாம்லெத் என்னவோ பேசிக் கொண்டிருந்தது பற்றி அவள் பெருந்திகில் அடைந்தாள்; அவனுடைய மனக்கோளாறே அதற்குக் காரணமென்று கருதினாள். “தாயே! தந்தையின் ஆவி மீண்டும் மண்ணுலகிற்கு வருமாறு செய்தது நீர் செய்த பெருங்குற்றமே. அவ்வாறு இருக்க, நான் பித்துப்பிடித்துப் பிதற்றுகிறேன் என்று குறைகூறி மனந்தேறுதல் வேண்டா. என்நாடி பிடித்துப் பாரும். நான் பித்தனானால் நாடி விரைந்தோடுமே! அத்தகைய ஓட்டம் இன்றி அமைதியாக அன்றோ உள்ளது? அன்னாய்! குற்றம் உணர்ந்து உருகிக் கடவுளிடம் முறையிடு வீராக! இனி அரசன் நட்பைத் துறந்துவிடுவீராக! அவனுக்கு மனவிையாக இருந்து வாழ்தல் ஒழிவீராக! என் அருமைத் தந்தையை நினைத்து வழிபடுவீராக! எனக்குத் தாயாக விளங்குவீராக! அப்பொழுது நான் உண்மையான மகனாக இருந்து உம்முடைய வாழ்த்துப் பெறுவேன்” என்று ஹாம்லெத் கண்ணீர் சொரிந்து