பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122) ||__

அப்பாத்துரையம் - 37

ஓபிரான் அதன்பின், தன் குறிப்பறிந்து நடக்கும் தோழனும் முதல் அமைச்சனுமாகிய பக்"(அல்லது நற்றோழன் ராபின்) என்பவனைத் தன்னிடம் அழைத்தான்.

பக் கூரிய அறிவும் குறும்புத்தனமும் உடையவன். அவனை நேரில் கண்டவர் மிகச் சிலரேயாயினும் அவன் கைத்திறன் அறிந்தவர் பலர். அவன் குறும்புகள் எண்ணில்லாதவை. நாட்டுப்புறப் பெண்கள் பக்கமாக மறைந்து நின்று கூவி அச்சம் விளைவிப்பான். தயிர் கடைவோர் கலங்களில் புகுந்து வெண்ணெய் திரளாமல் தடுப்பான். பால் பருகுவோர் கிண்ணங்களிலிருந்து நண்டு உருவில் துள்ளி அவர்கள் பாலைக் கொட்டும்படி பண்ணுவான். முக்காலி உருவில் ஆராய்ச்சியாளர் முன் கிடப்பான். அவர்கள் உடகாரப் போகும்போது சற்றே சறுகி அவர்களை விழப்பண்ணி எல்லாரையும் சிரிக்க வைப்பான்.

ஓபிரான் பக் வந்ததும், “என் அரிய நண்பா! முன் ஒருநாள் நாம் பேசிக் கொண்டிருக்கையில், கடற்பன்றியின் மீது சென்ற ஒரு கன்னித் தெய்வத்தின் மேல் காமன் கணை தொடுத்ததைப் பார்த்தோமல்லவா? அக்கணை அவள்மீது விழாமல் தவறி ஒரு வெண்மலர்மீது விழுந்து அதனைச் சிவப்பாக்கியதை நீ பார்த்திருக்கலாம். அம்மலருக்குக் காதலர் மாயமலர்2 என்று பெயர். அதன் சாற்றை உறங்குவோர் கண்களிற் பிழிந்தால், எழுந்தவுடன் முதலிற் கண்ட ஆள் அல்லது பொருளின்மேற் காதல் கொள்வர். அம்மலரை நீ எனக்குப் பறித்துக் கொண்டுவா. அதன் சாற்றை நான் திதானியாவின் கண்களிற் பிழிந்து, அவள் எள்ளி நகையாட வழி தேடப் போகிறேன். அப்போது அவள் என் வழிக்கு வருவாள். அதன்பின் அதற்கு மாற்றான ஒரு மலரைப் பிழிந்து அம் மாயக்காதலை நீக்கிவிடுவேன்” என்று சொன்னான்.

மாய மலரைப் பறிக்கப் பக் சென்றபின் தெமத்ரியஸும் ஹெலனாவும் காட்டு வழியே வருவதை ஓபிரான் கண்டான். ஹெலனா தெமத்ரியஸிடம் தன் காதலையும் அதன் உறுதிப் பாட்டையும் பற்றிப் பேச முயன்றாள். ஆனால் அவன் அவளிடம் கடுமொழிகள் பேசி அவள் தன்னைத் தொடரவேண்டா என்று தடுத்துத் தள்ளிவிட்டுப் போனான்.

வன அரசன் காதலர்களிடம் என்றும் பரிவுடையவன். அதிலும் ஹெலனா நெடுநாளாய் தெமத்ரியஸிடம் மாறாப்