பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126) ||

அப்பாத்துரையம் - 37

காணவே, அவன் இதுகாறும் அவளிடம் காட்டிய வெறுப்பை மறந்து காதல் மொழிகள் பகரத் தொடங்கினான்.

உண்மையில் தெமத்ரியஸின் காதலையன்றி வேறெதனையும் ஹெலனா விரும்பினாளல்லள்.ஆயினும் அவளும் லைஸாண்டரும் தன்னிடம் காதல் மொழிகள் கூறுவதைக் கண்ட அவள் அது தன்னைக் கேலி செய்வதற்காகவே என நினைத்தாள். ஹெர்மியாவே ஒருவேளை அவளைக் காதலித்த இருவரையும் ஏவி இந்நாடகம் நடிக்கச் செய்திருக்கலாம் என்றும் அவளுக்குப் பட்டது.

ஹெலனாவுக்கெப்படியோ, அப்படியே ஹெர்மியாவுக்கும் இச்செய்தி விளங்கவில்லை. ஹெலனாவை வெறுத்திருந்த தெமத்ரியஸ் அவளைக் காதலித்ததே புதுமை. ஆனால், அது களிப்புத் தரும் புதுமையேயாகும். அதோடு தன் காதலனும் சேர்ந்து அவளைக் காதலிப்பது அவளுக்கு ஏன் என்று விளங்கவில்லை? முதலில் அது கேலி எனக் கொண்டு அவள் அவனை அணுகினாள். ஆனால், விரைவில் அவன் உண்மை யாகவே சீறுகிறான் என்பது அவளுக்குத் தெரிந்தது. ஹெலனா ஏதோ மாயத்தால் தெமத்ரியஸை மயக்கியதோடு தன் காதலனையும் மயக்கினாள் என்று அவள் நினைத்தாள்.

இதுகாறும் தோழியர் இருவரும் ஒற்றுமையாய் இருந்தனர். இப்பொழுது இக்காதற் சுழலில் பட்டு ஒருவரை ஒருவர் ஏசியும் தாக்கியும் பூசலிட்டனர்.

"ஹெர்மியா, நீ இப்படிக் கொடியவள் ஆவாய் என்று நான் நினைக்கவில்லை. உன்னுடைய லைஸாண்டரைக் கொண்டு என்னைப் பொய்யாகப் புகழ்ந்து ஏளனம் பண்ணச் செய்கிறாய். அதோடு என்னைக் காலால் உதைத்தால் கூடக் கால் கெட்டு விடும் என்று முதுகைத் திருப்பிக் கொண்டாடும் என் தெமத்ரியஸையும் எனக்கெதிராகத் தூண்டிவிட்டாய். அவ்வளவு வெறுப்பையும் இப்போது அவன் வஞ்சப் புகழ்ச்சியாக்கி என்னைத் 'தெய்வப் பெண்ணே! வனமாதே! மாணிக்கமே!' என்றழைக்கிறான். உன் பழைய பள்ளித் தோழியை இப்படி ஆண்பாலருடன் சேர்ந்துகொண்டு எள்ளி நகையாட உனக்கு எப்படி மனம் வந்ததோ? நாமிருவரும் ஒரே இருக்கையில் இருந்து, ஒரே பாட்டைப் படித்துக் களிப்புடன் உரையாடிக் கொண்டு