பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

127

ஒரே மாதிரியாய்ப் பூத்தைத்தோமே! ஒரே காம்பிற் பழுத்த ஈரொட்டுப் பழங்கள் போலன்றோ நாம் வாழ்ந்தது?" என்று ஹெலனா குறை கூறினாள்.

ஹெர்மியா இதற்கு மாறாக, "உன் சொல்மழை எனக்கு வியப்பைத் தருகிறது. நான் ஏளனம் செய்வதாகக் கூறிக்கொள்கிறாய். ஆனால் ஏளனம் செய்தது நானா? நீதானே, அதற்குமேல் என்னைக் குறை சொல்லவுந் துணிந்தாய்!” என்றாள். ஹெலனா, "அதுதான் சரி; அப்படியே நீ தொடங்கியதை விடாமல் நடித்துக் காட்டு, இப்படியே என் கண்முன் நாடகம் நடத்திவிட்டு என் முதுகு திரும்பியதும் ஒருவருக்கொருவர் கண்ணடித்து என்னை ஏளனம் செய்யுங்கள். தினையளவாவது உங்களுக்கு நட்போ, ஒழுங்குமுறையோ, நாகரிகமோ இருக்குமானால் என்னை இப்படி நடத்துவீர்களா?" என்று இடித்துக் கூறினாள்.

தோழியர் இருவரும் இப்படிச் சொற்போர் தொடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் ஹெலனாவின் காதலுக்கு நீ நான் என்று போட்டியிட்டு மற்போர் தொடுக்கும் எண்ணத்துடன் லைஸாண்டரும் தெமத்ரியஸும் அவர்களை விடுத்து அப்பாற் சென்றனர். அதைக்கண்டு அத்தோழியர் இருவரும் தம்முட் சண்டை செய்வதை விட்டுவிட்டுத் தத்தம் காதலரைத் தேடிச் சென்றனர்.

அவர்கள் குழப்பங்களனைத்தையும் கூர்ந்து கவனித்தான் ஓபிரான். பக்கை நோக்கி, 'இவையெல்லாம் உன் திருவிளை யாடல்கள்; வேண்டுமென்று தான் இப்படிச் செய்திருப்பாய் நீ’ என்றான். 'அப்படி ஒன்றும் இல்லை ஐயனே! அதேனியக் காதலர் என்றுதானே நீங்கள் சொன்னீர்கள். அதனையே குறிப்பாகக் கொண்டு சென்றேன். இவர்களும் அதேனியர்களே; ஆதலால் ஏமாந்தேன்; ஆனால் இப்பொழுது இக்குழப்பம் பார்ப்பதற்கு எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதை மட்டும் என்னால் மறுக்கக்கூட முடியவில்லை என்றான், குறும்பில் விருப்புடைய பக்.

ஓபிரான் 'சரி, போனது போகட்டும்; மற்போர் புரியச் சென்றிருக்குங் காதலர்கள் ஒருவரிடமிருந்து ஒருவரை எதிரியின் குரலில் பேசிப் பிரித்துக் கொண்டு போய் உறங்கவை. அதன்பின் மாயமலருக்கு மாற்றாகிய இம் மலர்ச்சாற்றை லைஸாண்டர்