பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ||

அப்பாத்துரையம் - 37

பாட்டம்: சரி, திருவாளர் நூலாம்படை, சற்று அதோ அந்த முள் முருங்கையின் முகட்டில் இருக்கும் தேனீயைக் கொன்று அத்தேன் கூட்டைக் கொண்டுவா. வரும்போது தேன் கூட்டை மட்டும் கிழித்து விடாதே. தேன் வழிந்து உன் உடலெல்லாம் வீணாகக் கெட்டுவிடும்; சரி, விரைவில் போ, அடே அந்தக் கடுகு வெடிப்புப் பயல் எங்கே?

கடுகு வெடிப்பு: இதோ இங்கேதான் இருக்கிறேன். நான் என்ன செய்யவேண்டும்? ஐயா!

பாட்டம்: ஒன்றுமில்லை. இந்தப் பயற்று நெற்றுச் சொறிவது போதாது.கொஞ்சம் துணையாக நின்று சொறி.இங்கே நல்ல அம்பட்டன் விடுதி ஏதாவது உண்டா? என் முகமெல்லாம் மயிர் அடர்ந்திருக்கிறது. முகம் வழித்துக்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் திதானியா அன்புடன், “என் அருமைக் கழுதையே? உனக்கு உணவுக்கு என்ன விருப்பம்? எனக்கு வனதெய்வம் ஒருவன் இருக்கிறான். அவனைக் கொண்டு அணில் கூடுகளைத் தேடிக் கொட்டைகள் கொண்டுவரச் சொல்லட்டுமா?” என்றாள்.

பாட்டத்துக்குக் கழுதைத் தலையோடுகூட நாவின் சுவையும் கழுதையின் சுவையாய் விட்டது. “எனக்கு அஃதொன்றும் வேண்டா, கொஞ்சம் வறுத்த கடலையே போதும்!" என்றான்.

“எனக்கு உறக்கம் கண்ணைக்கட்டிக்கொண்டுவருகிறது.உன் ஆட்கள் கொசுக்கள் போலக் குறுகுறு என்று ஓசையிட்டால் நான் உறங்க முடியாது' என்றான் சிறிது நேரங்கழித்து.

திதானியா:“அவர்கள் ஒன்றும் ஓசை செய்யமாட்டார்கள். தடையில்லாமல் சற்று என் தோள்மீது சாய்ந்து படுத்துறங்கு. ஆ! என் அருமைக் கழுதையே! உன்னை நான் பெற்றதே பேறு! என்று பாட்டத்தைக் கைகளால் அணைத்து உறங்கவைத்தாள்.

66

அச்சமயம் மறைவிடத்திலிருந்து ஓபிரான் வெளிவந்து, அட்டா, வன அரசி இருந்திருந்து கழுதையையா காதலிக்க வேண்டும். மிகவும் நன்றாயிருக்கிறது!” என்று நகைத்தான். திதானியா கண்களில் மாயச்சாற்றின் வன்மை இருந்து கொண்டு அவள் விருப்பத்தைக் கழுதைத் தலையன் பக்கமே இழுத்தது.அதே சமயம் தன்னுடன் பிணங்கிய கணவனது ஏளனத்தையும் அவளால்