பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132) ||

அப்பாத்துரையம் - 37

போக்க அவர்கள் காட்டிற்கு வேட்டையாட வந்தனர். காட்டில் அவர்கள் ஹெலனாவும் தெமத்ரியஸும் பகை நீத்துக் கைகோத்து வருவதைக் கண்டனர். பக்கத்தில் அதேபோல ஹெர்மியாவும் லைசாண்டரும் வந்து கொண்டிருந்தனர். தெமத்ரியஸ் இப்போது லைஸாண்டரிடம் பகைமையும் போட்டியும் கொள்ளாமல் நட்புடையவனாயிருந்தான்.

நிலைமை மாறிவிட்டபடியால், இனித் தன் பிடி முரண்டு செல்லாதென ஈஜியஸ் கண்டான். ஆகவே காதலர் மனப்படி மணம் புரிவிக்க இணங்கினான். மறுநாள் அரசனது மணவினை நடக்கும்போது அதனுடன் கூடவே இவர்கள் மணவினைகளும் நடந்தேறின. இம் மணவினைப் போதில், பட்டம் உட்படத் தொழிலாளர் தம் நாடகத்தை நடித்தனர். அஃது உயர்வுடையதாயில்லா விட்டாலும் காதலரது நகைத்திறனைத் தூண்டி அவர்கள்இன்பத்தைப் பெருக்க உதவிற்று.

மணநாள் இரவு அனைவரும் படுக்கைக்குச் சென்று உறங்கியதன் பின் வனதெய்வங்கள் தம் அரசன் அரசியுடன் வந்து மணவாழ்த்துப் பாடின.

1. மன்றற் படுக்கை

ஒன்றன்பின் ஒன்றாய்

நன்றென வாழ்த்திச்

சென்றிடு வோமே!

2. காத லிளைஞர்தம்

காதலி தழுவிப் போதரு புதல்வர் தீதற வாழ்க!

3. கருக்கொளு நேரம்

உருக்கொளும் ஓரை

திருப்பெறச் சேர விறுப்புறு வோமே.

(பாட்டு)