பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

3. வஞ்சகன் வஞ்சம்

139

தன் கணவனுடைய நண்பன் என்ற முறையில் இமொஜென் அயாக்கிமோவை நன்கு வரவேற்றாள். அவனுக்கு யாதொரு குறையுமின்றி வேண்டும் உதவிகளையும் புரிந்தாள். ஆனால், அவள் பாஸ்துமஸின் மனைவி என்று நடந்து கொண்டாளே யொழிய, பெண் என்ற முறையில் நடந்துகொள்ளவேயில்லை. தன் போன்ற இளைஞர் கருதும் காதலுக்கும் இமொஜென் போன்ற இல்லுறை தெய்வங்களுக்கும் எவ்வளவு தொலை என்பதை அவன் அறிய நெடுநாள் செல்லவில்லை. ஆனால், இதனை அப்படியே உள்ளபடி ஏற்பதென்றால், பத்தாயிரம் பொன்னும் போயின. அதுகூட அவ்வளவு பெரிதன்று. தோழரிடைத் தான் கூறிய வீம்பு என்னாகும்? தன் மதிப்பு என்னாகும்? எனவே எப்பாடு பட்டாவது. என்ன பொய் சொல்லியாவது தன் மதிப்பைக் காக்கவேண்டும் என்று எண்ணமிட்டான் அயாக்கிமோ

இக்கருத்துடன் நஞ்சகங்கொண்ட அவ்வஞ்சகன் ஓராள் தங்கியிருக்கும் அளவு பெரிதான ஒரு பெட்டி வாங்கினான். பின் அவன் இமொஜெனிடம் ‘நான் பிரிட்டனில் பல பகுதிகளையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். அது வரைக்கும் இப்பெட்டியை நல்ல பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்து திருப்பித்தர வேண்டுகிறேன்' என்று சொன்னான். இமொஜென் “அதனை என் கண் காண என் அறையிலேயே வைத்திருக்கிறேன்”என்று உறுதி கூறினாள்.

பணியாட்கள் மூலம் பெட்டி இமொஜெனுக்கு அனுப்பப் பட்டது.சூதொன்றும் நினையாத இமொஜெனும் அதனைத்தன் படுக்கையறையில் கொண்டு வந்து வைக்கும்படி கூறினாள். ஆனால், அப்பெட்டிக்குள் அயாக்கிமோவே உட்கார்ந்திருந்தான்.

இரவில் இமொஜென் நன்றாய் உறங்கியபின் அயாக்கிமோ மெல்லப் பெட்டியைத் திறந்துகொண்டு வெளிவந்தான். அறையின் அமைப்பையும் அதிலுள்ள பொருள்களையும் அவன் நன்கு மனத்தில் குறித்துக் கொண்டான். இமொஜென் படுக்கும் கட்டிலின் அமைப்பு அதன் உறுப்புக்கள் முதலிய விவரங்களை அதன்பின் கவனித்தான். அதன்பின் அவன் கண்கள் இமொஜென்