பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ||

அப்பாத்துரையம் – 37

உருவத்தின்மீது சென்றன. உள் ஒளி என்ற ஒன்று உண்டானால், அஃது அன்று அவள் உடலைச் சுற்றிலும் வீசிக் கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஞாயிற்றின் ஒளியும் திங்களின் குளிர்ச்சியும் ஒருங்கே நிறைந்து தோன்றின. பாலாடை போன்ற அவளுடைய மெல்லிய ஆடைகள் அவள் உடலமைப்பையும் நிறத்தையும் கூட அப்படியே எடுத்துக் காட்டுவனவாயிருந்தன; தனக்கு மிகப் பயன்படுமெனக் கருதி அவற்றையும் அவன் நன்கு கவனித்தான். அப்போது அவளது தொடையில், படுக்கைக்கான அவ்வுடையி லன்றி வேறெவ்வுடையிலும் பிறர் கண்கள் காணமுடியாத இடத்தில், மறு ஒன்று இருந்ததைக் கண்டான். இருளே நிறைந்த அவ்வஞ்சகன் நெஞ்சில் அம்மறுவைக் கண்டதே இருள் ஞாயிறு தோன்றிய தென்னும்படி இருளொளி வீசிற்று.

அயாக்கிமா இமொஜெனுடைய பணியாளருக்குக் கைநிறையப் பொன் கொடுத்து அவர்கள் துணையைப் பெற்றிருந் தமையால், அயாக்கிமோ அவள் படுக்கையறையில் பலநாள் தங்கியிருக்க முடிந்தது. தங்கி இரவுதோறும் ஓசையின்றி வெளிவந்து, ஒன்றுவிடாமல் அவ்வறையின் நுட்பங்கள், பொருள்கள், அவளைச் சேர்ந்த ஒவ்வொரு நண்பர், உறவினர், தோழியர் இவர்களுடைய விவரங்கள், அவள் இயல்புகள் பழக்கவழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் நன்கு அறிந்து கொண்டான். கடைசி இரவில் அவளது வளையையும் அரிய கைத்திறனுடன் அவள் கையினின்று திருடிக் கொண்டான்.

இறுதியில் அயாக்கிமோ பணியாளருதவியால் வெளிவந்து பெட்டியை மீட்டுக்கொண்டு ரோம் நகரத்துக்குப் புறப்பட்டான்.

4. வீண்பழி

ரோமில் வழக்கம்போல் தோழர்கள் கூடியிருந்தனர். பாஸ்துமஸும் அவர்களிடையே இருந்தான். அயாக்கிமோ வலியத் தன் முகத்தில் வெற்றிக்குறியை வருவித்துக்

கொண்டான். அதனைக் கண்டு வியந்தனர் பலர். புன்முறுவல் கொண்டனர் சிலர். பாஸ்துமஸ் மட்டும் தனக்குள் ‘ஏன் இந்த இறுமாப்பு; சான்றுகள் வரட்டும்; பார்ப்போம்' என்றிருந்தான். அவன் முகத்தில் அமைதி குடிகொண்டிருந்தது.