பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

||-– –

அப்பாத்துரையம் – 37

இப்பொன் வளையைத் தருக' என்றேன். அவள் முதலில் நெடுநேரம் தயங்கினாள். அதைத் தருவதில் வருத்த முண்டானால் அதனைத் தரவேண்டுவதில்லை என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கூறினேன். அவள் அது கண்டு துணிந்து. 'அப்படி யொன்றும் இல்லை. அஃது, என் உயிருக்குயிராயிருந்த காலமும் உண்டுதான். ஆனால் உங்களிடம் தராத பொருள் என்ன இருக்கமுடியும்?' என்று கூறி இதனைத் தந்தாள்” என்றான்.

பாஸ்துமஸின் முகம் சட்டென்று கறுத்தது. சினங்கொண்டு 'இஃதனைத்தும் உன் மாயப் புரட்டு.நீ அதனைத் திருடியே கொண்டு வந்திருக்கவேண்டும்' என்றான்.

‘ஆம். ஆனால் இதனை மட்டுமன்று. அவள் உள்ளத்தையும் திருடிக்கொண்டுதான் வந்திருக்கிறேன் என்று உனக்குக் காட்டுகிறேன்' என்று சீற்றத்துடன் மொழிந்து, பின் அவள் உடலமைப்புக்களையும் உறுப்புக்களின் அமைப்புக்களையும் விரித்துரைத்தான். இறுதியில் தனது மறுக்கப்படாத கடைசித் துருப்பாகிய மறுவைப் பற்றியும் கூறினான்.

பாஸ்துமஸின் முகம் வரவரச் சுண்டிக்கொண்டே வந்து இறுதியிற் குருதி கசியும்படி கன்றிவிட்டது. இனித் தோழர்களிடம் சீற்றங்கொண்டு என்ன பயன்? சீற்றமெல்லாம் இனி இமாஜெனிடத் திலும் அவளைப் படைத்த இறைவனிடத்திலுமேயாம்.

பந்தயம் தோற்றது.

ஆனால், பாஸ்துமஸ் இழந்தது பத்தாயிரம் பொன்னல்ல. அவன் தன் உயிர் நாடியையே இழந்தவன் போலானான்.பந்தயப் பேச்சுப்படி இமொஜென் கொடுத்த கணையாழியும்

அயாக்கிமோவினிடமே சென்றது.

5.படுகுழிப் பிழைத்தல்

பாஸ்துமஸ் மனத்தில் ஊழித்தீயே பரந்தெரிவது மாதிரி இருந்தது.இமொஜென் பேரில் அவனுக்கிருந்த சீற்றத்தில் அவளைக்கொன்றுவிட்டுத்தான் மறுவேலை என்று துணிந்தான். அவள் செய்த பிழையின் தன்மை, தனது சினத்தின் தன்மை இவற்றை விரித்து அவன் தன் நண்பனும் ஸிம்பலின் பணியாளனுமான 'பிஸானியோவுக்கு ஒரு கடிதம் எழுதினான்.