பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152) ||

அப்பாத்துரையம் – 37

கணவனது கொடுமை தப்பெண்ணத்தினால் வந்த தென்பதைக் கண்ட இமொஜென், அவன் துன்பங் காணப் பொறாமல் முன் வந்து, "இதோ! உங்கள் இமொஜென்!" என்று அவனைத் தழுவிக் கொண்டாள்.

இங்ஙனம் எதிர்பாரா வகையில் மகளையும் மருமகனையும் மீண்டும் நன்னிலையில் அடையப்பெற்ற ஸிம்பலின், போரில் கண்ட வெற்றி மகிழ்ச்சியினும் பன்மடங்கு அகங்களித்து அவர்களை ஏற்றுக்கொண்டான்.

இச்சமயமே நற்சமயமாகக் கொண்டு பெலாரியஸ் முன் வந்து, தன் பிழைகளையும் வெளியிட்டுத் தான் வளர்த்த ளைஞர்களை முன்நிறுத்தி, "ஐயனே! நான் இதுகாறும் தங்களுக்கும் என் தாய்நாட்டுக்கும் இழைத்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன். இதோ இவ்விருவரும் உம்முடைய மக்கள், உம்மீது பகைமையால் அவர்களைக் கவர்ந்துசென்று வளர்த்தேன்” என்றான்.

பிள்ளைகளைத் தந்தையினின்றும் பிரித்தது மிகப் பெருங்குற்றமேயாயினும், களிப்பே நிறைந்த இந்த நாளில் கறை வேண்டாமென்று கருதி, ஸிம்பலின் அவனை மன்னித்துத் தம் புதல்வரை அன்புடன் அணைத்துக்கொண்டான்.

இமொஜென் தான் ஆண் உடையிலிருந்தபோது தனக்குத் தலைவராயிருந்த லூஸியஸின் உயிரைக் கேட்க வேண்டாமலே எல்லாம் நலமாக முடிந்தது. இவ்வளவுக்குந் திட்டம் போட்டு முதலில் அவர் உயிரைக் கேட்காதிருந்த அவள் நுண்ணறிவுக்கு யாவரும் வியப்பெய்தினர்.

இளைஞரை உடன்பிறந்தவர்போல இதுவரை நடத்திய மொஜென் இப்போது உடன் பிறந்தவரெனவே கண்டு அவர்களைத் தழுவிக்கொண்டாள். மயக்க மருந்தினால் நிகழ்ந்த செய்திகளனைத்தும் அவள் எடுத்துக் கூறினாள். அதன்பின், அரசியின் மருத்துவன் வந்து ‘அரசி இங்கு நடப்பது யாவுங்கண்டு தனது மறைந்த தீவினை தன்னைச் சூழ்கின்றது என்று தெரிந்து மனங்கொதித்து மாண்டாள்' என்று தெரிவித்தான். மேலும், அவள் கொல்லும் எண்ணத்துடன் நஞ்சு கேட்பதைத் தான் குறிப்பாக அறிந்தே மயக்க மருந்தைக் கொடுத்ததாக அவன் கூறினான்.