பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 37

(158) ||__ __ 8மாமில்லஸ் என்ற ஒரு மைந்தன் இருந்தான். தாய்க்கு நேர்ந்த அவமதிப்பையும் துன்பத்தையும் நினைந்து நினைந்து அவனும் வாடித் துரும்பாக மெலிந்தான். அப்பொழுதும் அரசன் மனம் கனியவில்லை

ஹெர்மியோனுக்குச் சிறையில் ஒரு பெண் மகவு பிறந்தது. மகவின் முகத்தைப் பார்த்தாவது தன் கணவன் மனம் மாறக்கூடும் என்று அவள் அடிக்கடி நினைப்பாள். ஆனால், கொந்தளிக்கும் புயல்போலச் சீறிக் கொண்டிருக்கும் அரசன் முன் அக்குழந்தையைக் கொண்டுபோக யாருக்கும் மனம் துணியவில்லை. இதையறிந்து அந்நாட்டுப் பெருமக்களுள் ஒருவனான அந்திகோனஸ் என்பவன் மனவிை °பாலினா அப்பணியைச் செய்வதென முன்வந்தாள். ஹெர்மியோன் அவளை வாயார வாழ்த்தி, “உன் நல்லெண்ணம் ஈடேறுவதாக!" என்று சொல்லிக்கொண்டு குழந்தையை அவளிடம் ஒப்படைத் தாள்.

9

குழந்தையை

அரசன் முன் கிடத்திப் பாலினா கல்லுங்கரைய ஹெர்மியோனுக்காகப் பரிந்து பேசிப் பார்த்தாள். லியோன்டிஸ் அதற்குச் சற்றும் இணங்காதது கண்டு, குழந்தையைத் தனிமையாக இருக்கும்போது பார்த்தாவது அவன் மனம் இளகக்கூடும் என்று நினைத்து அதனை அங்கேயே விட்டு விட்டுப் போனாள். இதிலும் அவள் நினைவு தவறாகவே முடிந்தது.லியோன்டிஸ் குழந்தையைக் கடல் கடந்து ஆளில்லா இடத்தில் விட்டு விடும்படி அந்திகோனஸை ஏவினான். அந்திகோனஸும் அப்படியே விடச் சென்றான்.

குழந்தைக்கு நேர்ந்த முடிவு கேட்டு ஹெர்மியோன் உள்ளம் அனலிலிட்ட மெழுகுபோல் உருகிற்று. ஆனால், அதனை நினைந்தழுவதற்குக் கூட அவளுக்கு நேரமில்லை. அவள் குற்றத்தை நாட்டுப் பெருமக்கள் நிறைந்த மன்றத்தில் உசாவித் தீர்ப்பளிக்க மன்னன் முனைந்தான். அக்குற்றத்தின் முழு உண்மையையுங் கேட்டு வரும்படி "தெல்பாஸ் என்ற இடத்திலுள்ள பேர்போன குறிசொல்லுந் தெய்வத்தினிடம் அரசன் இரு தூதர்களை அனுப்பியிருந்தான். அவர்கள் அப்போது திரும்பி வந்து, 'ஹெர்மியோன் குற்றமற்றவள். பாலிக்ஸெனிஸும் அப்படியே லியோன்டிஸ் பொறாமை