பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

159

வாய்பட்டுக் கொடுங்கோலனாய் விளங்குகிறான். இழந்த குழந்தை பிழைத்து வந்தாலன்றி, அவனுக்கு வேறு பிள்ளையுமில்லை' என்று குறிகாரன் எழுதிய துண்டைக் கொடுத்தார்கள். அரசன் அம்மொழிகளையும் சட்டை பண்ணாமல் ஹெர்மியோ மீது குற்றஞ் சாட்டினான்.

இத்தனையுங் கேட்டு முன்னமேயே நலிவுற்றிருந்த மாமில்லஸ் இறந்து போனான். லியோன்டிஸுக்கு இப்போது அரசியிடம் சற்று இரக்கம் வரும் போலிருந்தது. ஆனால், அதற்குள் பாலினா அவனிடம் வந்து, 'ஹெர்மியோன் இறந்து போய் விட்டாள்' என்று கூறினாள்.

லியோன்டிஸின் மனம் இப்போதுதான் தன் நிலைக்கு வந்தது. தன் மனைவி கெட்டவளாயிருந்தால் இவ்வளவு மனஞ்சிதைந்து மடிந்திருக்க மாட்டாள் என்று அவனுக்குப் பட்டது. அதோடு மாமில்லஸ் இறந்ததால், குறிகாரன் மொழிகளும் உண்மை என ஓரளவு தெளிவுபடுத்தப்பட்டன. இழந்த அச்சிறு பெண்மகவு அகப்படவில்லையானால், தன் அரசாட்சிக்கு உரிமையான பிள்ளை வேறு இனி இருக்க முடியாதன்றோ?

3. ஆவாரை யாரே அழிப்பர்!

நிற்க, குழந்தையை ஆளில்லா நாட்டுக் கடற்கரையில் எறியவேண்டும் என்று சென்ற அந்திகோனஸின் கப்பல் பாலிக்ஸெனிஸின் நாடாகிய பொஹீமியாப் பக்கமே புயலால் கொண்டு போகப்பட்டது. குழந்தையை அவனும் அங்கேயே நல்லாடை அணிகளுடன் விடுத்துச் சென்றான். குழந்தையின் பிறப்பு முதலிய விவரங்களைக் கூறும் ஒரு கடிதமும்,12பெர்திதா (இழந்தவள்) என்ற பெயர் எழுதிய துண்டொன்றும் அவ்வாடையணிகளுடன் சேர வைக்கப் பட்டன. குழந்தையை விட்டுவிட்டுச் செல்கையில், அந்திகோனன் அத்தீமைக்குத் தண்டனை பெற்றான் என்று சொல்லும் வண்ணம் கரடி ஒன்றாற் கொல்லப்பட்டான்.

4. சேராதவரையும் சேர்த்துவைக்கும் காதல்

பெர்திதா என்னும் அக்குழந்தையை ஓர் ஏழை இடையன் கண்டெடுத்தான். அவளுடன் வைக்கப்பட்டிருந்த அணிகலன்