பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

அப்பாத்துரையம் – 37

களுள் சிலவற்றை விற்று அவன் செல்வமுடையவனாகி வேறோரூரிற் சென்று வாழ்ந்தான். பெர்திதா தான் யார் என்ற அறிவின்றி அவன் மகளாக அவன் வீட்டிலேயே வளர்ந்து வந்தாள். ஆயினும் அவள் தன் தாயின் ஒரு புதிய பதிப்பே என்னும்படி வடிவழகியாய் விளங்கினாள்.

அரம்பையரும்

13

பாலிக்ஸெனிஸின் புதல்வனான 3 பிளாரிஸெல் என்பவன் ஒரு நாள் வேட்டையாடி விட்டு வரும்போது பெர்திதாவைக் கண்டான். நானும் அழகுடைய அம்மெல்லியலாள் இடைச்சேரியில் இருப்பது கண்டு வியப்படைந்தான். அரசிளங்குமரன் என்ற நிலையில் அவளை அடுத்தால் எங்கே அவளிடத்தில் அன்பிற்கு மாறாக அச்சமும் மதிப்பும் மட்டும் ஏற்பட்டு விடுமோ என்று அவன் அஞ்சினான். அதனால் தானும் ஓர் இடைக்குல இளைஞன் போன்ற மாற்றுருக் கொண்டு தொரிக்ளிஸ் என்ற பெயர் பூண்டு அவள் நட்பையும் காதலையும் பெறுவானானான்.

வர வர, பெர்திதாவின் காதல் வலையிற் பட்டு பிளாரிஸெல் இடைச்சேரியிலேயே பெரும்பாலாகத் தனது நாளைக் கழிக்கத் தொடங்கினான். பாலிக்ஸெனிஸ் தன் மகன் அடிக்கடி அரண்மனையை விட்டுப் போய் வருவதையும் அரண்மனையில் அவன் கால் பாவாததையுங் கண்டான். எனவே ஒற்றர்களை ஏவி அவன் எங்கே போகிறான் என்று பார்த்து வரும்படி அனுப்பினான். அவர்களால் பிளாரிஸெல் இடைச்சேரியில் ஒரு மங்கையைக் காதலிக்கிறான் என்று அறிந்தான்.

அந்நாட்டிடையர்கள் பாலுக்காக மட்டுமன்றிக் கம்பளி மயிர்க்காகவும் ஆடுகள் வளர்த்து வந்தனர். ஆண்டுக்கு ஒரு தடவை அவற்றின் கம்பளி கத்தரிக்கப்பட்டது.நம் நாட்டு உழவர் தமது அறுவடை நாளைக் கொண்டாடுவது போல் அவர்களும் அம் மயிர்வெட்டி நாளை விழாவாகக் கொண்டாடி விருந்து செய்வர். அத்தகைய விருந்து நாளில் பாலிக்ஸெனிஸ் காமில்லோவையும் கூட்டிக்கொண்டு இடையர் மாதிரி உடையுடனே பெர்திதாவை வளர்த்த இடையனது வீட்டிற்குச் சென்றான்.