பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

161

இடையனும் அவன் மனைவியும் அரசனையும் காமில் லோவையும் தம்மை ஒத்த இடையர்களே எனக் கொண்டு வரவேற்றார்கள். அப்போது அரசனும் காமில்லோவும் அவ்விருந்தில் பிறருடன் கலவாது ஒரு மூலையில் பிளாரிஸெல் பெர்திதாவுடன் உட்கார்ந்து உரையாடி மகிழ்ந்திருப்பதைக் கண்டார்கள். இடையனிடம் சென்று அவர்கள், 'யார்' என்று அவன் கேட்க சூதின்றி ‘என் மகளும் அவளைக் காதலிக்கும் இளைஞனும்' என்றான்

பெர்த்திதாவின் அழகும் பெருமிதத் தோற்றமும் பாலிக்ஸெனிஸுக்கு வியப்பைத் தந்தன. அவளை அவனால் பாராட்டாதிருக்க முடியவில்லை. ஆயினும், அவள் ஓர் எளிய இடையன் மகளாதலால், அவளுடன் தன் மகன் காதல் கொள்வது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்கள் காதல் எவ்வளவு தாலை சென்றுள்ளது என்று காணும் எண்ணத்துடன் அவர்களை அணுகி உரையாடினான்.அவர்கள் அம்மாற்றுருவில் அவனை அறிந்து கொள்ள முடியவில்லை.

பாலிக்ஸெனிஸ்: இளைஞனே! உன் மனம் இப்புற விருந்துகளில் செல்லவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் உன் அகவிருந்தையும் நீ அவ்வளவு திறம்படச் செய்யவில்லை என்றுதான் சொல்லுவேன்.

பிளாரிஸெல்: அப்படியா! அதில் நீர் கண்ட குறையாது?

பாலிக்ஸெனிஸ்: நான் இளைஞனாயிருந்து காதல் கொண்டபோது என் காதலிக்கு வகைவகையான கண் கவர்ச்சியான நற்பொருள்கள் வாங்கித் தந்து மகிழ்வதுண்டு. நீ ஏன் ஒன்றும் கொண்டு வராமல் ஊமைக் காதலாகவே காதலிக்கிறாய்?

பிளாரிஸெல்: நெஞ்சில் பொருளற்று வெறுமையாய் வருபவர்களே கையில் பொருளுடன் வரவேண்டும். இந்நங்கை நல்லாளும் புன்மையான கைப்பொருள்களை மறுத்து என் நெஞ்சத்துள்ள விலையற்ற பொருளையே பொருளாக மதிப்பவள். அப்பொருள் வஞ்சமற்ற காதலேயாகும். எப்படியும் நீங்கள் இப்பேச்சை எடுத்துவிட்ட படியால் நீங்களே சான்றாக நான் அவளுக்கு அத்தகைய காதலைக் கொடுக்கிறேன் “(என்று அவள் பக்கம் திரும்பி)” என் உரிமைப் பெர்திதா! இப் பெரியவர்,