பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 37

162 || காதலைக் கண்ட மனிதர் ஆவார். அவர் அறிய நான் கூறுகிறேன். இந்த நொடி முதல் நம் உறவு காதலின் கனியாகிய மண உறவு ஆகுக! இந்நொடி முதல் நீயே என் துணைவி. இதுவே நம் மண ஒப்பந்தம்” என்றான்.

அவர்கள் காதல் இவ்வளவு வ்வளவு தொலை வளர்ந்திருக்கும் என்று நினைக்காத பாலிக்ஸெனிஸுக்கு இது முதலில் ஏமாற்றத்தையும் பின் சினத்தையும் உண்டு பண்ணிற்று. அவன் உடனே தனது மாற்றுருவைக் கலைத்து அரசனுருத் தாங்கி, ‘அடே அறிவிலி! ஒப்பந்தம் ஏற்படும்போதே உன் ஒப்பந்தத்தைக் கலைக்கிறேன் பார். நீ இந்நொடியிலேயே இவளை விட்டுப் பிரிந்து வரவேண்டும்' என்று கூறினான். பின் அரசிளங்குமரனை உடனழைத்து வரும்படி காமில்லோவிடம் சொல்லிவிட்டு அவன் அரண்மனை சென்றான்.

பெர்திதா பாலிக்ஸெனிஸின் மொழிகளைக் கேட்டதும், பிளாரிஸெலை நோக்கி, 'நீங்கள் அரச குமாரராதலால் உங்கள் பெருமையை நீங்கள் வைத்துக் கொள்வது பற்றி எனக்குத் தடையில்லை' என்று பெருமிதத்துடன் கூறிப் பின் பெருமூச்சுடன், 'என் கனவு மட்டும் பாழாயிற்று' என்றாள். பிளாரிஸெல் உடனே வெட்டெ டன ‘நான் உனக்கு அரச குமாரனல்லன்; காதலனே! என் உறுதியை மறக்க வேண்டாம்' என்றான். அவளது உளச் செம்மையையும் உயர்வையும் சேர்த்துவைக்க எண்ணினான்.

5. திரை நீக்கம்

லியோன்டிஸ் இப்பொழுது தன் மனைவிக்கும் நண்பனுக்கும் செய்த தீங்கை எண்ணி வருந்துவது காமில்லோவுக்குத் தெரியும். ஆகவே அவன் லியோன்டிஸ் நாடாகிய ஸிஸிலிக்கே அக்காதல் துணைவருடன் சென்று லியோன்டிஸின் உதவியால் பாலிக்ஸெனிஸ் இவர்களை ஒப்புக் கொள்ளும்படி செய்யலாம் என்று நினைத்தான். காதலரும் அதற்கிணங்கவே, அவர்கள் மூவரும் பெர்திதாவை வளர்த்த டையனுடன் புறப்பட்டு ஸிஸிலி வந்து சேர்ந்தார்கள்.

லியோன்டிஸ் காமில்லோவை அன்புடன் வரவேற்றான். பின் தன் நண்பனாகிய பாலிக்ஸெனிஸின் மகனை வரவேற்றுத் தழுவிக்கொண்டு, காண்டு, 'உன் தந்தைக்கு நான் பெரும் பிழை