பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

163

செய்துவிட்டேன்; உன்னைக் கண்டதும் அவனையே கண்டாற் போன்று மகிழ்கிறேன்' என்று அளவளாவினான்.

அப்போது அவன் பின் நின்ற பெர்திதாவைக் கண்டதும் அவன் கொண்ட வியப்பிற்களவில்லை. அவன் கண்ணுக்கு அவள் ஹெர்மியோனை அப்படியே உரித்து வைத்தாற் போன்றிருந்தாள். அவன் மனம் கனவுலகிற் சென்று உலவத் தொடங்கிற்று. 'ஆ! என் குழந்தையை நான் கொல்லாதிருந்தால், அல்லது அந்த அந்திகோனஸ் அவளைக் கொல்லாது விட்டிருந்தால் அவள் இன்று இவளே மாதிரி, இவள் பருவத்தில் இருப்பாளே!” என்று கூறி அவன் பெருமூச்சு விட்டான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த இடையன் மனத்தில் உண்மையின் ஒரு சாயல் தென்பட்டது. அவன் உடனே பெர்திதாவின் நகையுடனிருந்த கடிதத்தைக் கொண்டு வந்துகொடுத்தான். நகைகள், தான் குழந்தையுடன் வைத்துக் கொடுத்த அந்த நகைகளே என்பதை அரசன் உணர்ந்தான். உணர்ந்து பெர்திதாவைத் தன் புதல்வியென்றறிந்து அவளை ஏற்று மகிழ்ந்தான்.

இதற்கிடையில்

பாலினா வந்து அக்கடிதத்தின் எழுத்துக்களைப் பார்த்து அது தன் கணவன் (அந்திகோனஸ்) எழுதியதே என்று ஒப்புக்கொண்டாள்.

தன் கணவன் இப்போது எங்கே என அவள் அறிய விரும்பினாள். அப்போது இடையன் வருத்தத்துடன், ‘இக் குழந்தையை நான் காணும்படி கடற்கரையிலிட்டவர் தங்கள் கணவராகவே இருக்கவேண்டும். அவரை ஒரு கரடி விழுங்கியதை நான் கண்டேன். அதனைத் தங்களுக்கு இவ்வளவு நாட்கழிந்து நான் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று வருந்துகிறேன்' என்றான். பாலினா ஒருபுறம் தன் கணவன் இறந்ததற்காக வருத்தமும், இன்னொரு புறம் பெர்திதா மீட்கப்பட்டாள் என்றதற்காக மகிழ்ச்சியும் கொண்டாள்.

பெர்திதாவை மீண்டும் பெற்றது லியோன் டிஸுக்கு மகிழ்ச்சியேயென்றாலும், அவள் உருவைக் கண்டதால் அவன் தாயின் உருவையும் அதனுடன் சேர்த்து, 'ஆ! உன் தாயைக் கொன்ற தீவினையேனாயினேனே!” என்று உருகினான். அதனைக் கேட்டு நின்ற பாலினா இரங்கி, "ஐயா! உயிருடன் ஹெர்மியோன்