பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

175

அயாகோ இயற்கையாகவே வஞ்சமும் கைத்திறனும் உடையவன். மனித இயல்பையும் மனிதர் மனப்போக்கையும் அறிந்தவன். மனிதர் மனத்தை உள்ளூர நின்று ஆற்றி வைக்கும் உணர்ச்சியாற்றல்களையும், அவற்றை இயக்கும் நெறியையும், அவற்றால் துன்பத்தை மிகுதியாக விளைத்துப் பிறரைத் துன்புறுத்தும் வகையையும் அவன் நன்குணர்ந்தவன். தன் எதிரிகளாகிய ஓதெல்லோ, காசியோ ஆகிய இவர்களுள் காசியோ மீது ஓதெல்லோவுக்குத் தப்பெண்ணம் உண்டாகும் படி மட்டும் செய்து விட்டால், எதிரி கையாலேயே எதிரியை- ஒருவேளை எதிரிகள் இருவரையும் கொன்று ஒழித்து விடலாகும் என்று அவன் எண்ணி மனக்கோட்டை

கட்டலானான்.

3. காசியோ மீது குற்றச்சாட்டு

பகைவர் படை உலைந்ததும், படைத்தலைவரும் அவர் தலைவியும் தம்மிடையே வந்திருப்பதும், ஸைப்பிரஸ் மக்களக்கு எல்லையில்லாக் களிப்புத் தந்தன. அக்களிப்பில் அவர்கள் எங்கும் விழாக் கொண்டாடத் தாடங்கினர். பாலும்

ம்

நறுந்தேனும் எங்கும் ஒழுகின,

ஓதெல்லோ வாழ்க,

டெஸ்டிமோனா வாழ்க' என்னும் ஆரவாரத்தினிடையே பொற்கலங்களும் வெள்ளிக்கிண்ணங்களும் கணகண என ஒலித்தன.

அன்றிரவு படைப்புலம் காவல் காக்கக் காசியோ அமர்த்தப்பட்டான்.படைஞர்கள் மட்டுக்கு மிஞ்சிக் குடிக்கவோ, தம்முட் சண்டையிட்டு மக்களை வெருட்டவோ செய்யாதபடி பார்க்க அவனுக்கு ஆணை தரப்பட்டது. அயாகோவின் ஆழ்ந்த சூழ்ச்சிகளுக்கு அன்றைய இரவே மிகவும் வாய்ப்புடைய தாயமைந்தது. அவன் துணைத் தலைவனாகிய காசியோவிடம் பொய்ப் பற்றுக் காட்டி, அவனது உடல் நலத்தையே விரும்பி வற்புறுத்துபவன் போல அவனை மேன்மேலும் குடிக்கச் செய்தான். குடிக்கும், இன்மொழிக்கும் இணங்கும் இயல்புடைய காசியோ அயாகோவின் சூதை அறியாது வரம்பற்றுக் குடியில் மூழ்கி அறிவிழந்தான். அந்நிலையில் அயாகோ தனது அரிய வேலைப்பாட்டை இன்னும் மிகைப்படுத்தி டெஸ்மோனாவின் பெயரையும் புகழையும் இடையே இழுக்க, அவன் அப்பெயரைத்