சேக்சுபியர் கதைகள் - 2
185
நோக்கினான். 'நீ உலகில் பிறந்த நாள் எத்தகைய கரி நாளோ' வென்றான். இறுதியில் எதையோ எண்ணி, அவன் சட்டென்று வெளியே சென்றான்.
இவ்வளவு கேட்டும் அவள் கலங்கினாளேயன்றி உரைக்கு உரை பகரவும் இல்லை. என்ன என்றோ, ஏன் என்றோ காரணம் வினாவவும் இல்லை. கணவன் மொழியில் அன்பில்லை என்ற ஒன்றிலேயே அவள் உள்ளம் கல்லாய்ப் போயிற்றுப் போலும். உரைக்கு மாறாக அன்பு தருதல் அவள் செயல். கொடுமைக்கு மாறாக உரைதரல் அவள் அறிந்தது. அன்பிற்கு மாறாக அவள் செய்வதெல்லாம் செயலற்றுச் சாவாமல் சாவது ஒன்றே ‘என்னைக் குறை கூறும்போது நான் குழந்தையாகி விடுகின்றேன். குழந்தையை மென் மொழிகளால் அல்லவோ திருத்தல் வேண்டும்? வன்மொழி கூறினால், அஃது என்ன செய்யும்?' என்றாள். உடலென்னும் சிறு சிறையுட்பட்ட இப்பேருயிர்க் காரிகை.
எதிர்பார்த்திருந்து
பின்
கண்ணயர்ந்தாள்.
கணவனை நெடுநேரம் டெஸ்டிமோனா படுக்கை சென்று
வெளியிருளை நிலவாக்கும் காரிருள் செறிந்த கருத்துக்களுடன் கற்புக்கே கனிவு தரும் அக்காரிகையைக் கொல்லும் முடிவுடன், ஒதெல்லோ அவள் படுக்கையறையுள் நுழைந்தான். வானுலகத்து அரம்பையர் அழகும் பின்னிட, மாசு மறுவற்ற சலவைக் கல்லால் கடைந்த பொற்பு மிக்க பதுமைபோன்று அவள் கிடந்ததைக் கண்டு, கொல்ல வந்த அவன் கண்களும் கதறிக் கண்ணீருகுத்தன. புன்முறுவல் பூத்து வாடியது போன்ற அவளது முகத்தில் அந்நேரத்திலும் முத்தமிடாதிருக்க மீண்டும் மீண்டும் முத்தமிடாதிருக்க அவனால் முடியவில்லை. ஆனால், அவன் தன் மனத்தை உளியாக்கிக் கொண்டு வந்திருந்தான். அக் கண்ணீர்களைப் பார்த்து, 'நீங்களும் அவள் பக்கத்தில் நிற்கும் கொடியவர்கள்' என்றான். முத்தங்களைப் பார்த்து, 'நீங்களே அவளுக்குப் பிறந்த கடைசிக் குறளிகள்' என்றான்.
அவன் கண்ணீரின் ஈரமும் முத்தங்களின் வெம்மையும் அவளைத் துயிலினின்றெழுப்பின. அவனது கலங்கிச் சிவந்த கண்களிலும், துடி துடிக்கும் உதடுகளிலும், முகத்தோற்றத்திலும்