சேக்சுபியர் கதைகள் - 2
189
3. மேரியா: பணிப்பெண்-ஸர் ஆண்ட்ரூவைக் குறும்புடன் தூண்டிப் பின் அவனையே மணந்தவள்.
4. வேறு பணிப்பெண்.
கதைச்சுருக்கம்
உருவில் ஒருவரை ஒருவர் ஒத்த ஸெபாஸ்தியன், வயோலோ என்ற இரட்டையரான அண்ணன் தங்கையர் கடற்பயணத்தின் போது இல்லிரியா அருகில் கப்பலுடைந்ததனால் ஒருவர் நிலையை ஒருவர் அறியாதவகையில் வேறு வேறு காமன்களால் காப்பாற்றப்பட்டனர்.
வயோலா தன்னைக் காப்பாற்றிய மீகாமன் நல்லுரையால் ஆணுருவில் ஸெஸாரியோ என்ற பெயருடன் இல்லிரியாத் தலைவன் ஆர்ஸினோவிடம் வேலைக்கமர்ந்தாள். ஆர்ஸினோ உயர்குடி மங்கையாகிய ஒலிவியாவைக் காதலித்தும் அவள் அவனைப் பொருட்படுத்தாத நிலையில் வயோலாவைக் காதல் தூதனாக அனுப்பினான்.வயோலா மனத்துள் ஆர்ஸினோவைக் காதலித்தாள். ஆனால் அவள் ஆணுருவில் மயங்கி ஒலிவியாவும் காதல் வயப்பட்டாள். போதாக்குறைக்கு இக்காதலைக் கண்டு பழங்காதலனான ஸர் ஆண்ட்ரூ, மேரியா என்ற குறும்புப் பணிப்பெண்ணால் தூண்டப் பெற்று அவளை எதிர்த்தான்.
ஸெபாஸ்தியனைக் காப்பாற்றிய மீகாமனாகிய அந்தோனியோ ஆர்ஸினோவின் உறவினனை எதிர்த்த குற்றத்தால் இல்லிரியாவுக்குள் வரமுடியாதவன். ஆகவே, இல்லிரியாவைக் காணவந்த ஸெபாஸ்தியனிடம் பணப்பையைக் கொடுத்துவிட்டு, நெடுநேரமானதால் தேடவந்தான்.வயோலாவை ஸெபாஸ்தியனென்றெண்ணி ஸர் ஆண்ட்ரூவுக் கெதிராக உதவிப் பின் காவலர் கையில் பட்டு, பணப்பையைக் கேட்டான். வயோலா விழிக்க அவனைக் காவலர் கொண்டேகினர்.
இன்னொருபுறம் ஸெபாஸ்தியனை வயோலா என்றெண்ணி உரையாடிய ஒலிவியா மீது ஸெபாஸ்தியன் காதல்கொள்ள, அவர்கள் மணம் செய்துகொண்டனர். பின் அவனைத் தேடி ஒலிவியா ஆர்ஸினோவிடம் வந்து வயோலாவைக் கணவனென்றழைத்தாள். அதே சமயம் காவலருடன்