சேக்சுபியர் கதைகள் - 2
193
இப்போது வயோலாவின் மனம் இருதலைப்பட்டு வருந்தியது. ஆர்சினோவின் நேர்மை, உயர்குணம், அவன் காதலின் ஆழம் இவற்றைக் இவற்றைக் கண்டபின் கண்டபின், அவள் தன் உள்ளத்தையே அவனுக்குப் பறிகொடுத்து விட்டாள்; ஆனால், அவள் பெண் என்று கூடத் தெரியாமல், ஆண் என்று நினைத்த ஆர்ஸினோ, அவள் காதலை அறியாததுடன் மட்டுமல்லாமல், தன் காதலை மறுக்கும் இன்னொருத்தியிடம் அதனை வளர்க்கும்படி அவளை அனுப்ப எண்ணினான். தன்னையும் அறியாமல் அவள், “அரசே, நீங்கள் ஒலிவியாவைக் காதலிப்பது போலவே தங்களை ஒரு பெண் காதலிப்பதாகவும், நீங்கள் மாறாக அவளைக் காதலிக்க முடியாத நிலையில் உள்ளீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது, அவள் நீங்கள் மறுப்பதை ஏற்றுக்கொண்டு உங்களை மறந்துவிட வேண்டும் என்றுதானே சொல்வீர்கள்? ஒலிவியா இப்போது அப்படித்தானே சொல்கிறாள். அதனை ஏற்று அவளை மறப்பதன்றோ நல்லது?" என்றாள். ஆனால் இவ்வழக்கு ஆர்ஸினோவுக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. “நான் ஒலிவியாவைக் காதலிப்பது போல் ஒரு பெண் என்னைக் காதலிப்பது முடியாத காரியம். எனவே, 'அப்படி வைத்துக் கொள்வோம்' என்று பேச இடமேயில்லை. இது மறக்கமுடியாத காதல்; எனவே, மறுக்கமுடியாத காதல்" என்றான் அவன்.
வயோலா: அரசே, நீங்கள் அப்படிச் சொல்வதற்கில்லை. என் நடைமுறை அறிவிலேயே...
ஆர்ஸினோ: சரி, சரி அப்படி வழிக்குவா. உன் நடைமுறை அறிவிலேயே நீ காதலை நன்றாய் அறிந்தவன் என்று புலப்பட்டு விட்டது.
வயோலா: ஆம், ஒரு பெண் ஆடவனைக் காதலிக்கும் காதல் எத்தகையது என்பதை நான் நன்றாய் அறிவேன். என் தந்தைக்கு ஒரு புதல்வி உள்ளாள். அவள் ஒருவரை உண்மையாகக் காதலிப்பவள். நான் ஒரு பெண்ணாயிருந்து உங்கள் காதலுக்குச் சரியாக உங்களைக் காதலிப்பதனால் கூட அவளை விட மிகுதியாகக் காதலிக்க முடியாது.
ஆர்ஸினோ: ஆ! நீ வேறு காதற் கதைகள் வைத்திருக் கிறாயா! சரி, அவள் காதல் என்னாயிற்று?